ஹெச்.ராஜா-விடம் தைரியமாக பாடகி சின்மயி கேட்ட அந்த கேள்வி என்ன தெரியுமா..! – அதிரடி பதில்..!

0
2052
Chinmayi

மெர்சல்’ படம் மீதான சர்ச்சை நாடு முழுவதும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. இதில் “ஜிஎஸ்டி ” டயலாகை நீக்க கோரி மத்தியில் ஆளும் கட்சி பிரச்சனை செய்து வந்தது.
mersalஇதில் எச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் திரு . ஜோசப் விஜய் என விஜயின் மதத்தை சாடும் வகையில் கருத்தை வெளியிட்டிருந்தார் . இதுவிஜயின் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அனைவரும் தனது பெயர் முன் “ஜோசப்” என்பதை இனைத்து ஹாஸ்டாக்காக இனைத்து வந்தனர். இந்நிலையில் மீண்டும் எச்.ராஜா விஜய்யின் உண்மையான பெயர் ஜோசப் விஜய் என அவரது வாக்காளர் அடையாள அட்டையை ட்விட்டரில் வெளியிட்டு உண்மை கசக்கிறதா எனவும் கேட்டிருந்தார்.

மெர்சல் படத்தை விமர்சித்தது மட்டுமில்லாமல், விஜய்யின் அடையாள அட்டை புகைப்படத்தை வெளியிட்டு உண்மை கசக்கிறதா என கேட்டது ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அவரின் செயலுக்கு எதிராக பல கருத்துகள் வந்தநிலையில், பாடகி சின்மயி அவருக்கு ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். “எது கசக்கிறது? ஒரு தனிப்பட்ட குடிமகனின் அடையாள அட்டையை அவரது ஒப்புதல் இல்லாமல் சமூகவலைதளத்தில் பகிர்வது சட்டரீதியானதா?

நாளை ஏதாவது உண்மையை நிரூபிப்பதற்காக ஆதார் அட்டையை விபரங்களை வெளியிடுவார்களா” என சின்மயி கேள்வியால் எச்.ராஜாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
Chinmayi Sripaada