கரீனா கபூரின் குழந்தையை பார்த்துக்கொள்பவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா ?

0
82416
kareena-kapoor
- Advertisement -

பொதுவாகவே சினிமா பிரபலங்கள் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருப்பதால் தங்களுடைய குழந்தைகளை பார்த்துக் கொள்வதற்கு (செவிலித்தாய்) ஆட்களை நியமிப்பார்கள். இது வழக்கமான ஒன்று தான். அந்த வகையில் பாலிவுட் நடிகை கரீனா கபூர் மற்றும் பிரபல நடிகர் சைப் அலி கானும் தங்களுடைய குழந்தையை பார்த்துக் கொள்வதற்கு ஒரு பெண்ணை நியமனம் செய்து உள்ளார்கள். அந்தப் பெண்ணிற்கு கொடுக்கும் சம்பளத்தை கேட்டு அனைவரும் ஷாக் ஆகி விட்டார்கள் என்று சொல்லலாம்.

-விளம்பரம்-

நடிகை கரீனா கபூர் அவர்களின் குடும்பமோ திரை குடும்பம் என்று சொல்லலாம். அவருடைய தந்தை, தாயார், சகோதரி அனைவருமே பிரபலமான நடிகர்கள். அதன் காரணமாகவே இவர் மிகச் சிறிய வயதிலேயே சினிமா உலகில் வந்து விட்டார். நடிகை கரீனா கபூர் முதன் முதலாக ரெப்யுஜீ என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமானார். அதற்கு பிறகு இவர் பல படங்களில் நடித்து வந்தார். இன்று வரை பாலிவுட் சினிமாவில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறார் நடிகை கரீனா கபூர்.

இதையும் பாருங்க : தாம் தூம் இல்லை, சாய் பல்லவி முதலில் துணை நடிகையாக நடித்தது இந்த படத்தில் தான்.

- Advertisement -

பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகர்கள் கரீன கபூர் மற்றும் சைப் அலி கான். இவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் காதலித்து 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். நடிகர் சைப் அலி கான் அவர்கள் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளரும் ஆவார். பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக கலக்கிக் கொண்டிருக்கிறார். இவர்களுக்கு அழகான ஒரு மகனும் உள்ளார். அவருடைய பெயர் தைமூர் அலி கான் . மேலும், கரீனா கபூர் வெளியே எங்கு சென்றாலும் தன்னுடைய குழந்தையுடன் எடுக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவார். இதனாலே தைமூர் அலி கான் சோசியல் மீடியாவில் பிரபலம் என்று சொல்லலாம்.

Image result for Taimur's nanny,

-விளம்பரம்-

இவர் சினிமா, விளம்பரம் என பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அத்துடன் தன் குடும்பத்துடன் நேரம் செலவழித்து வருகிறார். சமீபத்தில் கூட இவர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. ஆனால், அது எல்லாம் இல்லை என்று மறுப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் நடிகை கரீனா கபூர் அவர்கள் தன்னுடைய குழந்தையை பார்த்துக் கொள்ளும் பெண்ணுக்கு மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பளம் தருவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வந்தது. இது குறித்து அவரிடம் ஒரு பேட்டியில் கேட்டு உள்ளார்கள். அதற்கு கரீனா கபூர் கூறியது, இந்த செய்திக்கு நான் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. அது மட்டும் இல்லாமல் நான் இதைப் பற்றி எதுவும் பேச போவதில்லை என்று கூறி விட்டார்.

Advertisement