தென்னிந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகைகளில் ஒருவராக சாய் பல்லவி திகழ்ந்து வருகிறார். இவர் திரைப்பட நடிகை மட்டும் இல்லாமல் ஒரு சிறந்த நடனக் கலைஞரும் ஆவார். நடிகை சாய் பல்லவி அவர்கள் திரைப்பட நடிகை மட்டுமில்லாமல் ஒரு மருத்துவரும் ஆவார். இவர் நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தின் காரணமாக தன்னுடைய மருத்துவத் தொழிலை விட்டு விட்டார். நடிகை சாய்பல்லவி அவர்கள் 2016 ஆம் ஆண்டு தன்னுடைய மருத்துவ பட்டத்தைப் பெற்றார். மேலும், இவருக்கு நடனத்தின் மீதும் அதிக ஆர்வம் உடையவர். அதனால் இவர் 2008 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நடன நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்.
இதற்கு பிறகு இவர் பல மொழி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னுடைய நடன திறமையை வெளிப்படுத்தினார். இதற்கு பிறகு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. இவர் 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளி வந்து மாபெரும் பிளாக் பஸ்டர் படமாக அமைந்த ப்ரேமம் என்ற திரைப்படத்தில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் அதிகமாக கவரப்பட்டார். தற்போது வரை இவருடைய இந்த மலர் கதாபாத்திரம் ரசிகர்கள் விட்டு நீங்கவில்லை என்று சொல்லலாம். இந்த படத்தின் மூலம் தான் இவர் கதாநாயகியாக சினிமா உலகில் தோன்றினார்.
இதையும் பாருங்க : உடல் தெறியும்படியான ட்ரான்ஸ்பிரண்ட் ஆடையில் போஸ். ரசிகர்களை கிறுக்குப்பிடிக்க வைக்கும் கிரன்.
இதனைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டில் கலி என்ற படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து படம் நடித்தார். அதற்கு பிறகு தொடர்ந்து நடிகை சாய் பல்லவி அவர்கள் பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்து வருகிறார். நடிகை சாய் பல்லவி அவர்கள் தமிழில் நடிகர் சூர்யாவுடன் என் ஜி கே, தனுசுடன் மாரி 2 போன்ற படங்களில் நடித்து உள்ளார். மேலும், இவர் மாரி 2 படத்தில் ரவுடி பேபி என்ற பாடலுக்கு இவர் ஆடிய நடனம் இணையத்தில் படு வைரலாக பரவியது.
இந்நிலையில் நடிகை சாய் பல்லவி அவர்கள் 2008-ல் தாம் தூம் என்ற படத்தில் நடிகை கங்கனா ரணாவத் அவர்களுக்கு தோழியாக நடித்து இருந்தார். அதோடு இந்த படத்தில் தான் இவர் சினிமா உலகிற்கு அறிமுகமானார் என்று பலரும் சொல்லி இருந்தார்கள். ஆனால், உண்மையாகவே நடிகை சாய் பல்லவி அவர்கள் 2005 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னா நடிப்பில் வெளி வந்த கஸ்தூரி மான் என்ற படத்தில் நடிகை ஜாஸ்மீனுக்கு தோழியாக நடித்து உள்ளார். இந்த படத்தில் தான் இவர் சினிமா உலகிற்கு அறிமுகமானார். தற்போது இந்த கஸ்தூரிமான் படம் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தற்போது நடிகை சாய் பல்லவி அவர்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்