அதிக கனம் தாங்காது என்று தெரிந்து கொண்டும் அதை எடுத்துட்டு வந்து இருக்கிறார்கள்-வெளியான ஷாக்கிங் தகவல்.

0
121640

தமிழ் சினிமா உலகில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடித்து வரும் படம் இந்தியன் 2. இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். ப்ரியா பவானி சங்கர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரம் நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் அநியாயமாக உயிரிழந்து உள்ளார்கள். இந்த கோர சம்பவம் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியன் 2 திரைப்படம் பெரும் பொருட்செலவில் லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. படத்தில் இடம்பெறும் சண்டைக் காட்சிக்காக நாசரேத் பேட்டையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் நடந்து வந்துள்ளது.

விபத்து நடந்த இடம்

- Advertisement -

நேற்று இரவு படத்தின் சண்டைக் காட்சிக்காக லைட்டிங் செய்யும் பணியில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டிருந்த போது திடீரென்று கிரேன் அறுந்து விழுந்தது. மேலும், சம்பவ இடத்திலேயே 3 பேர் பலியாகியுள்ளனர். படப்பிடிப்பில் நடந்த இந்த கோர சம்பவத்தை நேரில் பார்த்த துணை நடிகை ஒருவர் கண்ணீர் மல்க நடந்ததை விவரித்துள்ளார். பொதுவாகவே இரவு ஷூட்டிங் நடக்கும் போது 9.30 மணிக்கு பிரேக் விடுவார்கள். அந்த சமயத்தில் தான் அடுத்த காட்சிக்கான ஏற்பாடுகள் நடக்கும். நேற்றும் அப்படித் தான் நடந்தது. படப்பிடிப்பின் போது பிரேக் விடப்பட்டது. அந்த சமயத்தில் படக்குழுவினர் லைட்டிங் வேலைகளை செய்து கொண்டிருந்தார்கள். அப்போது தான் அந்த இடத்தில் இருந்து சங்கர் சார், கமல் சார், காஜல் அகர்வால் எல்லோரும் கிளம்பினார்கள்.

இதையும் பாருங்க : ஜெயம் ரவியின் மூத்த மகனை டிக் டிக் டிக் படத்தில் பார்த்திருப்பீங்க. அவருடைய இளைய மகனை பார்த்துள்ளீர்களா ?

-விளம்பரம்-

ரொம்ப நேரம் ஆகவே கிரேனில் இருந்து சத்தம் வந்து கொண்டு இருந்தது. எல்லோரும் லைட்டிங் செட் பண்றது நாள் தான் சத்தம் வருகிறது என்று நினைத்துக் கொண்டு வேலையை பார்த்தார்கள். திடீரென்று பார்த்தால் ஒரு பெரிய சத்தம் ஏற்பட்டது. கிரேன் கீழே அறுந்து விழுந்தது. எனக்கு என்ன நடக்குதுன்னே புரியாம ஒரு நிமிடம் அதிர்ச்சியில் நின்று விட்டேன். தூரத்திலிருந்து சங்கர் சார் தலையில் அடித்துக்கொண்டு கதறி அழுது கொண்டு ஓடி வந்தார். கீழே இருந்தவர்கள் மீது கிரேன் விழுந்து பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்து எல்லோரையும் மருத்துவமனைக்கு கூட்டிட்டு போனார்கள். ஆனால், மூன்று பேரை காப்பாற்ற முடியவில்லை. இதற்கு காரணம் கிரேன் பாரம் தாங்கா முடியாமல் தான் அறுந்து விழுந்தது என்று கூறப்படுகிறது.

இந்தியன் 2

இன்னும் சில பேர் ஓனர் மேல் தான் தப்பு என்றும் சொல்கிறார்கள். ஏனென்றால் அது சூட்டிங்க்கு பயன்படுத்துகிற கிரேன் இல்லையாம். அதிக கனம் தாங்காது என்று தெரிந்து கொண்டும் அதை எடுத்துட்டு வந்து இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் ஈபிவியில் எப்போதும் காற்று வீசிக்கொண்டிருக்கும். சம்பவம் நடந்த போதும் பெரும் காற்று அடித்துக் கொண்டிருந்தது. அலைமோதிக் கொண்டு இருந்ததனால் அப்படி நடந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த சம்பவ இடத்தில் கார்ட்டூனிஸ்ட் மதனின் மருமகன் கிருஷ்ணா, ப்ரொடக்ஷன் உதவியாளர், டெக்னீசியன் என்று மூவர் அநியாயமாக இறந்து உள்ளார்கள். மேலும், இன்னும் சில பேர் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். பிரேக் சமயத்தில் நடந்ததால் 3 பேர் மட்டும் உயிரிழந்தார்கள். ஷூட்டிங் சமயத்தில் நடந்திருந்தால் எத்தனை பேரோ?? என்னால் நினைத்துக் கூட பார்க்கவில்லை இப்பவும் நடுக்கமாக உள்ளது என்று கூறினார்.

Advertisement