ட்ரிகர் சக்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு காயத்திரி பயங்கர அப்செட்டாக உள்ளார். எப்போதும் யாரை பற்றியாவது புறம் பேசும் பழக்கம் உடைய அவர் தன் கோபம் முழுவதையும் ரைசாவிடம் காட்ட தொடங்கியுள்ளார். இந்த நிலையில் ரைசாவிற்கும் கயாத்திரிக்கும் இடையிலான சண்டை அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளதை இன்றைய நிகழ்ச்சியில் நாம் பார்க்கலாம்.
எலிமினேஷன்காக இன்று நடைபெற உள்ள நாமினேஷன் முறை சற்று வித்யாசமாக இருக்கப்போகிறது. இதற்கு முன்பு வரை நாமினேஷன் முறை ரகசியமாக இருந்தது அனால் இன்று அப்படி இருக்கப்போவதில்லை.
அனைவரின் படங்களும் பொதுவெளியில் வைக்கப்பட்டு யார் யாரை நாமினேட் செய்யப்போகிறார்கள் என்ற விவரத்தையும் அதற்கான காரணத்தையும் வெளிப்படையாக கூற வேண்டும். இதில் கயாத்திரியையே அதிகம் பேர் நாமினேட் செய்ய உள்ளதாக தெரிகிறது. இதில் ரைசாவும் கயாத்திரியும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி நாமினேட் செய்துகொள்கின்றனர்.
பிக் பாஸ் வீட்டில் இப்போது அனைவரும் கயாத்திரிக்கு எதிராய் திரும்பி உள்ள நிலையில், அவர் தனிமைப்பட்டுள்ளதை போல் தெரிகிறது.
அதோடு காயத்திரி ரைசைவிடம் சண்டைபோடுவதற்கு முக்கிய காரணம் தான் தான் என்று சினேகன் ரைசைவிடம் கூறுகிறார்கள்.
அதற்கு அவர் கூறும் காரணம் என்னவென்றால், ஓவியா தனிமைப்பட்ட சூழலில் அவருக்கு தான் துணையாக இருந்ததாகவும் அதே போல் ரைசாவிற்கு இப்போது துணை நிற்பதாலும் காயத்திரி தன் மீதும் வெறுப்படைந்துள்ளதாகவும் அந்த வெறுப்பையே அவர் ரைசாவிடம் காட்டுவதாகவும் சினேகன் ரைசாவிடம் கூறுகிறார்.
இதை எல்லாம் ஒத்துக்கொள்ளாத ரைசா எல்லோரும் போய் சாவுங்கள் என்று தன் கோவத்தை வெளிப்படுத்துகிறார். ரைசாவின் கோவம் எதுவரை செல்லும் என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பார்ப்போம்.