‘உனக்கு ஏன் கர்ணன் புடிக்கல’ சிவகார்த்திகேயனை தான் ரஞ்சித் தாக்கி பேசினாரா? இதோ வீடியோ

0
350
- Advertisement -

‘வாழை’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் பா.ரஞ்சித் ஆவேசமாக பேசியது நடிகர் சிவகார்த்திகேயனை குறித்து தான் என்பதுபோல் தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ். இவர் இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதன் பின் 2018 வெளியான ‘பரியேறும் பெருமாள்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக மாரி செல்வராஜ் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்றதோடு மட்டுமில்லாமல் பல்வேறு விருதுகளையும் பெற்றது.

-விளம்பரம்-

இந்த திரைப்படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘கர்ணன்’, உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான ‘மாமன்னன்’ போன்ற எல்லா படங்களும் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது மாரி செல்வராஜ் இயக்கி தயாரித்து இருக்கும் படம் ‘வாழை’. முழுக்க முழுக்க குழந்தைகளை மயப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் கலையரசன், நிகிலா விமல், பிரியங்கா நாயர் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு தேனி மலர் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். சந்தோஷ் நாராயணன் தான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

- Advertisement -

வாழை படம்:

இப்படம் வருகின்ற ஆகஸ்ட் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. மாரி செல்வராஜ் இளம் வயதில் இருந்து சந்தித்த ஜாதி, மாதம் பாகுபாடுகளை மையமாக வைத்து வாழை என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் வாழைப் பட குழுவினருடன் பா.ரஞ்சித், வெற்றிமாறன், ராம் உட்பட ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டு இருந்தார்கள். அப்போது விழாவில் பா.ரஞ்சித், வீட்டில் நடக்கும் சின்ன சின்ன எமோஷனலான விஷயத்தை கூட நான் படத்தில் காட்சியாக கொண்டு வர நினைப்பேன்.

விழாவில் பா. ரஞ்சித்:

ஆனால், அதை என்னால் எடுக்க முடியாமல் போகும் போது எமோஷனல் ஆகி அழுது விடுவேன். அதை மாறி செல்வராஜ், அவரோட முதல் படத்திலேயே ரொம்ப வலிமையான ஒரு விஷயத்தை படமாக்கி இருந்தார். மாரி செல்வராஜ் உடைய பலமே கதை சொல்லல்தான். ரொம்ப எளிமையாக கதை சொல்லக் கூடியவர். இதனால் மக்கள் மத்தியில் அது பேசும் பொருளாக ஆகிறது. அதை நான் ரொம்ப பிரமிப்பாக ஆகப் பார்க்கிறேன். சில சமயங்களில் கொடுமையாக அவர் காட்டும் சில விஷயங்கள் ரொம்ப பயமாக இருக்கும்.

-விளம்பரம்-

கர்ணன்- மாமன்னன் குறித்து சொன்னது:

அவருடைய படங்களில் வலியை காட்டும் போது கைதட்டி கொண்டாடுகிற கூட்டம், அதே கர்ணனாக நின்று சண்டை போடும்போது வன்முறையாக அதை மிகை படுத்தினார்கள். அதை விமர்சனம் செய்தார்கள். பரியேறும் பெருமாள் நல்ல படம்ன்னா, மாமன்னன் என்ன மொக்கை படமா? திருப்பி அடிச்சா அது நல்ல படம் இல்லையா? மொத்தத்தில் அவருடைய வாழ்க்கையைப் பற்றி ரொம்ப வெளிப்படையாக வாழைப் பட மூலம் சொல்லி இருக்கிறார் என்று எமோஷனலாக பேசியிருந்தார்.

சிவகார்த்திகேயன் பேசியது:

இதனிடையே நடிகர் சிவகார்த்திகேயனின் வீடியோ ஒன்று வைரலாகி கொண்டு இருக்கிறது. அதில் அவர், மாரி செல்வராஜ் கர்ணன் மற்றும் மாமன்னன் படங்களில் ஆக்ஷன்க்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தார். ஆனால், அவர் வாழை படம் வாழ்வியல் சார்ந்து பண்ணிருக்காரு. இதுபோல அவர் நிறைய படம் பண்ண வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். எனக்கு இப்போ ‘பரியேறும் பெருமாள்’ படத்திற்குப் பிறகு வாழை ரொம்ப ஃபேவரைட் படமாக மாறிவிட்டது என்று கூறியிருக்கிறார். அதனால் பா.ரஞ்சித் வாழை ட்ரெய்லர் விழாவில் பேசியது, நடிகர் சிவகார்த்திகேயனை தானா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Advertisement