என் படத்துல நீ யார் அத சொல்ல, இந்த பொண்ண தூக்குங்க சரண் – சீனா தானா டான்சர் மீது கடுப்பாகி இருக்கும் அஜித்.

0
922
ajith
- Advertisement -

தல அஜித்தை நடிகை ரசிகா கடுப்பேற்றி இருக்கும் சம்பவம் குறித்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பல ஆண்டு காலமாக தமிழ் சினிமா உலகில் அல்டிமேட் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு இருந்தது.

-விளம்பரம்-

தற்போது வலிமை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் துணிவு படத்திற்கான வேலையில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள். இந்த படம் பல மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கின்றனர். அதோடு இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த கதையில் அஜித் மிகவும் இன்வால்வ் ஆகி இருப்பதால் அவரது லுக்கை அவரே டிசைன் செய்து இருக்கிறார்.

- Advertisement -

துணிவு படம்:

அதோடு இந்த படத்தில் அஜித்திற்கு இரட்டை வேடம் என்று கூறப்படுகிறது. இதனால் அஜித் இந்த படத்திற்காக 20 முதல் 25 கிலோ வரை எடை குறைத்து இருக்கிறார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சுவாரியர் நடிக்கிறார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் சிஜோய் வர்கீஸ், ஜான் கொகைன், வீரா, சமுத்திரக்கனி உள்பட பலர் நடிக்கிறார்கள். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

படம் குறித்த தகவல்:

இந்த படம் ஒரு வங்கி கொள்ளை சம்பந்தமான கதை என்ற தகவல் அனைவரும் அறிந்த ஒன்று. அதாவது, பஞ்சாப் மாநிலத்தில் நடந்த உண்மை சம்பவத்தை வைத்து தான் இயக்குனர் வினோத் இந்த படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது. தற்போது இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து அஜித் அவர்கள் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.

-விளம்பரம்-

நடிகை செய்த செயல்:

இந்த நிலையில் தல அஜித்தையே நடிகை ரகசியா கடுப்பேற்றி இருக்கும் சம்பவம் வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது, கமலின் வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் சிறுக்கி சிறுக்கி வந்தா என்ற ஐட்டம் பாடலுக்கு நடிகை ரசிகா நடனம் ஆடிருந்தார். பின் அஜித் உடைய அட்டகாசம் படத்தில் தீபாவளி தல தீபாவளி என்ற பாடலுக்கு ரசிகா நடனம் ஆடி இருப்பார். அப்போது அவர் முதல் இரண்டு சரணம் நடனம் முடிந்தவுடன் அஜித் உக்காந்திருப்பார். அங்கே ரகசியா பெரிய நடிகர் என்று கூட ஒரு மரியாதை இல்லாமல் கால் மேல் கால் போட்டு உட்காருவார்.

கோபத்தில் அஜித் சொன்னது:

இதை பார்த்த அங்கிருந்தவர்கள் கடுப்பாக்கி அவரிடம் சொல்ல போகும் போது அஜித் அது எல்லாம் வேண்டாம். மும்பையில் இதெல்லாம் சகஜம் என்று சொல்லிவிடுவார். பின் அந்த நடிகை அடுத்த சில வரிகள் நடனமாடி முடித்துவிட்டு வந்து பேக்கப் பண்ணிடலாமா? என்று சொன்னார். இதனால் கடுப்பான அஜித் என்னுடைய படத்திற்கு நீ எப்படி பேக்கப் சொல்லலாம் என்று கோவம் அடைந்து இயக்குனரை அழைத்து இந்த பெண் இனிமேல் இந்த பாடலில் நடனம் ஆடக்கூடாது என்று சொல்கிறார். அதற்கு பிறகு அஜித்தே அந்த பாடலில் நடனம் ஆடி இருந்தார்.

Advertisement