லாக்டவுனுக்கு முன் ரெஸ்டாரண்டில் பிரித்திவிராஜை கண்டதும் ஷாலினி செய்த செயல்- போன் செய்து மன்னிப்பு கேட்க வைத்துள்ள அஜித்.

0
26895
shalini
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து வருபவர் பிரித்திவிராஜ். இவரை பெரும்பாலும் பப்லு என்று தான் அழைப்பார்கள். தற்போது சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியலில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தமிழ் சினிமா உலகில் ஜாம்பவானாக திகழ்ந்த நடிகர் எம் ஜி ஆர், சிவாஜி கணேசன் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் பிரிதிவிராஜ். இவர் சினிமா உலகிற்கு வந்து நாற்பது வருடங்களுக்கு மேல் ஆகி உள்ளது. இதுவரை 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

வீடியோவில் 10 : 33 நிமிடத்தில் பார்க்கவும்

-விளம்பரம்-

ராஜ்கபூர் இயக்கத்தில் 1998 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் அவள் வருவாளா. இந்த படத்தில் அஜித் குமார், சிம்ரன், பிரிதிவீராஜ், சுஜாதா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படத்தில் அஜித் குமாருக்கு வில்ளனாக பிரிதிவீராஜ் நடித்திருந்தார்.சமீபத்தில் நடிகர் பிருத்விராஜ் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் வணக்கம் தமிழா என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இதையும் பாருங்க : தோனி பிறந்தநாளில் விஜய்,ஷாருகான் முதல் அவெஞ்சர்ஸ் சாதனை வரை முறியதடித்த சுஷாந்த் படத்தின் ட்ரைலர்.

- Advertisement -

அப்போது பல்வேறு நடிகர்கள் குறித்து பேசிய பிரித்திவிராஜ் அஜித் குறித்து பேசுகையில் எனக்கு சிறந்த நண்பர் என்னுடைய தங்கை படைத்த பள்ளியில்தான் படித்தார் என்னுடைய மூன்றாவது தங்கைக்கு அவர் மிகவும் நெருக்கமானவர் எப்போது என்னை பார்த்தாலும் முதலில் என்னுடைய தங்கை எப்படி இருக்கிறார் என்றுதான் கேட்பார் சமீபத்தில் ஒரு ரெஸ்டாரன்டில் சென்று இருந்தேன் அப்போது அங்கே அஜீத்தின் மனைவி ஷாலினி வந்திருந்தார்.

அஜித்துடன் நான் வேலை செய்திருக்கிறேன். ஆனால் ஷாலினியுடன் நான் வேலை செய்ததில்லை. அதனால் எங்கே நாம் சென்று அவர்களிடம் பேச முயன்றாள் அவர்கள் ஏதாவது நினைத்துக் கொண்டு விடுவார்களோ என்று நான் பேசவில்லை. இதே போன்று ஒரு இரண்டு மூன்று முறை நான் ஷாலினியை அந்த ரெஸ்டாரண்ட்டில் சந்தித்தேன். ஒருமுறை அந்த ரெஸ்டாரண்ட்டில் வேலை செய்பவர் எனக்கு போன் செய்துஷாலினி உங்களின் நம்பரை கேட்கிறார் என்று சொன்னார். நானும் கொடுங்கள் என்று கூறி விட்டேன் அடுத்த சில மணி நேரத்திலேயே எனக்கு போன் செய்தார் ஷாலினி.

-விளம்பரம்-

அவர் போன் செய்தவுடன் சார் என்னை மன்னித்து விடுங்கள் நான் உங்களிடம் வொர்க் செய்தது இல்லை அதனால் தான் உங்களிடம் நான் வந்து பேசவில்லை என்றுசொன்னார். மேலும் என்னிடம் பேசாதது குறித்து அஜித்திடம் தெரிவித்திருக்கிறார். அவர் மிகவும் கோபித்துக் கொண்டு அவர் எவ்வளவு பெரிய ஆள் அவர் எனக்கு சீனியர் அவரிடம் நீ ஏன் பேசாமல் வந்தாய் என்று கேட்டதாக ஷாலினி என்னிடம் சொன்னார் அவரது மனைவியைக் கூட அவர் எப்படி வளர்த்து வருகிறார் என்பதை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார் பிரிதிவிராஜ்.

Advertisement