என் பெயரை இழக்க விரும்பவில்லை – கமலின் படத்தில் இருந்து விலகிய அமிதாப் – பாக்கியராஜ் சொன்ன ஷாக்கிங் தகவல்.

0
6239
kamal
- Advertisement -

சமீப காலமாகவே இந்திய திரையுலகை சேர்ந்த நடிகர்கள் பலர் அநியாயமாக உயிரிழந்து வருகின்றனர். ரிஷி கபூர், இர்பான் கான், சிரஞ்சீவி சார்ஜா, டாக்டர் சேதுராமன் போன்ற பல நடிகர்கள் உயிரிழந்துள்ளனர். ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் தான் ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அவருக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தால் தான் தூக்கு போட்டு இறந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்திற்கு பாலிவுட்டில் நிலவும் நெபோடிஸம் தான் காரணம் என சமூக வலைதளத்தில் சர்ச்சை கிளம்பி உள்ளது.

-விளம்பரம்-
எல்லா பெயரையும்

இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசனனுக்கும் இதுபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்ததாக தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. கமல்ஹாசனும், அமிதாப் பச்சனும் இணைந்து ஒரு படத்தில் நடித்தனர். ஆனால், அந்த படம் பாதியிலே நின்று போனது. அதற்கு அமிதாப் பச்சன் தான் காரணம் என்ற தகவல் சோசியல் மீடியாவில் தற்போது வலம் வந்து கொண்டு இருக்கிறது. மேலும்,

- Advertisement -

இதுகுறித்து பாக்கியராஜ் தெரிவித்த போது, கதைப்படி கமலஹாசன் இறக்க வேண்டும் அப்போதுதான் அந்த கதை நன்றாக இருக்கும். ஆனால் அப்படி நடந்தால் கமலுக்கு தான் இந்த படத்தின் மூலம் பெயர் கிடைக்கும். அமிதாப்பச்சனின் கதாபாத்திரம் மக்களின் மனதில் நிற்காது. இதனை ஏற்றுக்கொள்ளாத அமிதாப் இந்த படத்தில் தனக்கு விருப்பமில்லை என்றும் இந்த ஒரு படத்திற்காக ஒரு வருடங்கள் நடித்து இத்தனை காலம் சேர்த்து வைத்த பெயரை எடுத்துக் கொள்ள விரும்புவதாகவும் கூறினார். இதனை சரி கட்டவே கபர்தார் படத்தக்கு நிறைய நாட்கள் கால்ஷீட் கொடுத்தார் அமிதாப் என்று கூறியிருந்தார்.

பொதுவாகவே பிரபல நட்சத்திரங்கள் சினிமா உலகில் தனக்கு பிறகு தங்கள் பிள்ளைகளையே பெரிய நடிகர்களாக ஆக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இந்த நிலை இந்தியா முழுவதும் நடைபெற்று வருவதாகவும், எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல் கடுமையாக உழைத்து முன்னுக்கு வரும் நடிகர்களை அவர்கள் வளர விடுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறக்கிற நடிகர் கமல்ஹாசன் அவர்கள் பாலிவுட் வரை சென்று தனது திறமையை வெளிப்படுத்த போராடினார்.

-விளம்பரம்-
இருவரும் இணைந்து

ஆனால், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அவர்கள் கமலின் வளர்ச்சியை தடுக்க நினைத்து ஒரு படத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறியதாக தகவல் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. அமிதாப் பச்சனும், கமல்ஹாசனும் நடித்து வந்த கபார்தார் படம். இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் அவர்கள் அளித்த பழைய பேட்டியில் அமிதாப் பச்சன் தான் இதற்கு காரணம் என்று கூறி உள்ளதாக தகவல் தற்போது அசுர வேகத்தில் இணையங்களில் பரவி வருகிறது. இப்படி தான் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்பட்டு மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது.

Advertisement