ஸ்பாட்டில் பேசிய வசனம், சிரித்த பார்வையாளர்கள், கடுப்பான கவுண்டமணி – இருப்பினும் அந்த வசனம் படத்துல வந்திருக்கு பாருங்க. இதோ வீடியோ.

0
1132
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் காமெடியில் ஜாம்பவனாகவும், சக்கரவர்த்தியாகவும் திகழ்ந்தவர் கவுண்டமணி. அன்றும் இன்றும் என்றும் இவருடைய காமெடிக்கு எவரும் நிகரில்லை என்று சொல்லலாம். காமெடி என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் முதலில் ஞாபகத்தில் வருவது கவுண்டமணி பெயர் தான். அந்தளவிற்கு தன்னுடைய நகைச்சுவை திறமையின் மூலம் மக்களை தன்வசம் படுத்தியுள்ளார். மேலும், இவருடைய கவுண்டர்கள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் ரசிக்க வைத்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் இவர் கதாநாயகர்களுக்கு இணையாக ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்தவர். இவர் ரஜினி கமல் காலம் தொடங்கி தற்போது உள்ள நிறைய நடிகர்கள் வரை என பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அதிலும் கவுண்டமணி– செந்தில் காம்போ எல்லாம் வேற லெவல்.

-விளம்பரம்-

இவர்கள் இருவரும் இணைந்து நடித்த காமெடி படங்கள் எல்லாம் இன்றும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இவர்கள் இருவரும் இணைந்து நடித்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. காலங்கள் மாற மாற இவர்களுடைய பயணமும் மாறிவிட்டது. இருந்தாலும் இப்போது வரை தமிழ் சினிமா உலகில் கவுண்டமணி –செந்தில் காம்போவை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இப்படி தமிழ் சினிமா உலகில் கவுண்டமணி – செந்தில் கொடிகட்டி பறக்க இவர்களுடைய காமெடி ட்ராக் எழுதியவர்களில் முக்கியமானவர் ராஜகோபால். இவர் இயக்குனராகவும் நடிகராகவும் திகழ்ந்திருக்கிறார்.

- Advertisement -

பெரிய மருது படம்:

தற்போது இவர் பல படங்களில் பிசியாக இருக்கிறார். இந்நிலையில் பெரிய மருது படத்தில் கவுண்டமணிக்கும் எஸ்எஸ் சந்திரனுக்கும் இடையே நடந்த பிரச்சினை குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ராஜகோபால் பகிர்ந்திருக்கிறார். என் கே விஸ்வநாதன் இயக்கத்தில் 1994ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் பெரிய மருது. இந்த படத்தில் விஜயகாந்த், கவுண்டமணி, ரஞ்சிதா, செந்தில் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் கவுண்டமணி – எஸ் எஸ் சந்திரன் காமெடி காட்சிகள் எல்லாம் வேற லெவல் இருக்கும்.

ராஜகோபால் அளித்த பேட்டி:

ஆனால், உண்மையாலுமே இந்த காமெடி காட்சி எடுக்கும் போது ஏற்பட்ட கலவரத்தை இயக்குனர் ராஜகோபால் பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, பெரிய மருது படத்தில் ஒரு காட்சியில் கவுண்டமணி கட்டிலில் உட்கார்ந்து இருப்பார். அப்போது எஸ் எஸ் சந்திரன் உள்ளே வரும் போதே அம்மா, தாயே, மகாலட்சுமி என்று கூப்பிட்டுக் கொண்டு வருவார். மகாலட்சுமி பிச்சைக்காரன் வந்திருக்கான் சாப்பாடு போடு என்று கவுண்டமணி சொல்வார். உள்ளே வந்து எஸ் எஸ் நான் தான் மாப்பிளை என்று சொல்வார். இதைத்தான் நான் எழுதி வைத்து இருந்தேன். ஆனால், எஸ் எஸ் அவர்கள் உள்ள வரும் போது கரடிக்கு சட்டை போட்ட மாதிரி யாரு உட்கார்ந்து இருப்பது என்று கலாய்ப்பார்.

-விளம்பரம்-

படப்பிடிப்பில் இருந்து சென்ற கவுண்டமணி:

இந்த காமெடியை கேட்டவுடன் படப்பிடிப்பில் இருந்த எல்லோரும் சிரித்து விட்டார்கள். உடனே கவுண்டமணி கோபமாக கட் என்று சொல்லிவிட்டு ராஜகோபால் அந்த காமெடி பேப்பரை கொடுங்கள். அதில் இந்த டயலாக் இருக்கா? பார்ப்போம் என்று கேட்டார். நான் அந்த மாதிரி எதுவும் இல்லை, அது அவர் சொன்னதுதான். நன்றாகத்தான் இருக்கிறது ஆடியன்ஸ் எல்லாரும் சிரிக்கிறார்கள் என்று சொன்னேன். ஆனால், கவுண்டமணி அவர்கள் சிரிக்கிறார்கள் என்றெல்லாம் ஒத்துக்கொள்ள முடியாது. நான் யாருமே தெரியாமல் அவனை பிச்சைக்காரன் என்று சொல்வது ஒரு நியாயம். அவர் வேண்டுமென்றே டயலாக்கில் இல்லாததை எப்படி என்னை கரடி என்று சொல்லலாம் என்று கோபித்துக் கொண்டு நடிக்க முடியாது என்று சொன்னார். ஏன்னா, ஏற்கனவே கவுண்டமணிக்கும் எஸ்எஸ் சந்திரனுக்கும் இடையே சில வாக்குவாதங்கள் இருக்கிறது.

எஸ்.எஸ்.சந்திரன்- கவுண்டமணி சண்டை போட காரணம்:

ரெண்டும் பேரும் நண்பர்கள் தான். இருந்தாலும் ஒருவரை ஒருவர் அப்பப்போ மோதி கொளவர்கள். அதிலும் இந்த படத்தில் இவர்கள் போடும் சண்டை உண்மையாலுமே போட்டது தான். அதை அப்படியே காட்சியாக எடுத்துவிட்டோம். இதைவிட இன்னொரு காட்சியில் இருவரும் பயங்கரமாக மோதிக் கொண்டார்கள். கவுண்டமணி பூக்காரி என்பவரை இரண்டாம் திருமணம் செய்ய இருப்பார். உடனே தன்னுடைய மகள் வாழ்க்கை போகிறது என்று நினைத்து எஸ் எஸ் அவர்கள் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொண்டு வருவார். இதனால் கோபம் கொண்ட கவுண்டமணிக்கும்,எஸ் எஸ் சந்திரனுக்கும் இடையே சண்டை வரும். ஆனால், அவர்கள் பயங்கரமாகச் சண்டை போட்டார்கள். உண்மையாலுமே அவர்கள் இப்படி போடுவார்கள் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. சும்மா சாதாரண சண்டையை நிஜமான சண்டை ஆகவே இரண்டு பேரும் போட்டிருந்தார்கள். அந்த அளவிற்கு பெரிய மருது படம் எடுக்கும் போது இருவருக்கும் இடையே பயங்கர கிளாஸ் நடந்தது என்று கூறியிருக்கிறார்.

Advertisement