காரில் அதிவேக பயணம், நண்பர்களுடன் கைது செய்யப்பட்ட கார்த்தி – அவரே சொன்ன சம்பவம்

0
493
- Advertisement -

நடிகர் கார்த்தியை போலீஸ் கைது செய்திருந்த சம்பவம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் கார்த்தி. இவர் ‘பருத்தி வீரன்’ என்ற படம் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

அந்த வகையில் கடந்த ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் என்ற படத்தில் வந்தியதேவன் என்ற கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்து இருந்தார். இயக்குநர் மணிரத்தினத்தின் நீண்ட நாள் கனவு ஆன ‘பொன்னியின் செல்வன்’ படம் உலக சினிமா ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு இருந்தது. இந்த படத்தின் இரண்டு பாகமும் சூப்பர் ஹிட் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

- Advertisement -

ஜப்பான் படம்:

பின் கடைசியாக நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான படம் ஜப்பான். இந்த படத்தை ராஜூ முருகன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் அனு இமானுவேல், சுனில், விஜய் மில்டன், பவா செல்லதுரை, ஜித்தன் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தார்கள். இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரித்து இருக்கிறது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி இருந்தது. மேலும், இது கார்த்தியின் 25வது படம் ஆகும். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.

கார்த்தி நடிக்கும் படங்கள்:

இதனை அடுத்து இவர் 96 படத்தின் இயக்குனர் பிரேம் இயக்கத்தில் உருவாகி வரும் மெய்யழகன் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் நலன் குமாரசாமி இயக்கும் வா வாத்தியாரே படத்திலும் நடிக்கிறார். இதுபோக, கார்த்தி அவர்கள் சர்தார் 2, தீரன் அதிகாரம் 2, கைதி 2 போன்ற படங்களின் இரண்டாம் பாகங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வரிசையில் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய இயக்குனர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி அவர்கள் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.

-விளம்பரம்-

கார்த்தி பேட்டி:

இந்த படம் 1960 களின் காலகட்டத்தில் நடைபெறும் கேங்ஸ்டர் பின்னணியில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி நடிகர் கார்த்தி அவர்கள் தொடர்ந்து பல படங்களில் பிசியாக கமிட்டாகி வந்திருக்கும் நிலையில் போலீஸ் இவரை கைது செய்த சம்பவம் குறித்த செய்தி தான் தற்போது இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதாவது, சமீபத்தில் ஒரு பேட்டியில் கார்த்தி, நான் USல் படித்தது அனைவரும் அறிந்ததே. ஓரு முறை USல் என்னுடைய நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தேன். இரண்டு கார்களில் நண்பர்கள் போனோம்.

கார்த்தியை போலீஸ் கைது செய்ய காரணம்:

அங்கு பெரிதாக வழிகள் தெரியாது என்பதால் என்னுடைய காருக்கு முன் சென்றிருந்த காரை பார்த்து தான் நான் சென்றிருந்த காரும் சென்றது. எங்களுக்கு முன் சென்ற கார் வேகமாக சென்றதால் எங்களுடைய காரும் வேகமாக சென்றது. இதனால் டிராபிக் விதிகளை மீறி கார் ஓட்டியதற்காக நான் மற்றும் என்னுடைய நண்பர்கள் அனைவரையும் போலீஸ் கைது செய்தது. பின் நீதிமன்றத்திற்கு கொண்டு போய் $250 டாலர் அபதாரம் கட்ட உத்தரவிட்டார்கள். அதற்குப் பிறகு அபதாரம் கட்டி வெளியே வந்து விட்டோம் என்று கூறியிருந்தார்.

Advertisement