எங்கே கூட்டி வந்திருக்கின்றோம் பாண்டிச்சேரி சிறுமி விவகாரத்தில் கமல் போட்ட பதிவு – பதிவை சுட்டிக்காட்டி இயக்குனர் லெனின் பாரதி பதில்.

0
466
Kamal
- Advertisement -

புதுச்சேரி சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கமலஹாசன் பதிவிற்கு இயக்குனர் லெனின் பாரதி கொடுத்திருக்கும் பதில் தான் தற்போது இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. சோசியல் மீடியாவில் வைராக்கப்பட்டு வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் புதுச்சேரியில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. புதுச்சேரி முத்தியால் பேட்டையில் உள்ள சோலை நகர் பகுதியை சேர்ந்தவர்கள் நாராயணன்- மைதிலி தம்பதியினர்.

-விளம்பரம்-

இவர்களுக்கு 9 வயதில் ஆர்த்தி என்ற மகள் இருக்கிறார். இவர் அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த 2ம் தேதி தன்னுடைய வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருக்கும் போது மாயமாகி இருக்கிறார். நீண்ட நேரம் ஆகியும் தன் மகளை காணவில்லை என்று பெற்றோர்கள் போலீசில் புகார் கொடுத்திருக்கிறார்கள். நான்கு நாட்கள் ஆகியும் ஆர்த்தி கிடைக்கவில்லை. பின் ஒரு கால்வாயில் சாக்கு மூட்டையில் சடலமாக ஆர்த்தி என்ற சிறுமி கிடைத்து இருக்கிறார். இதனை அடுத்து போலீசார் உடலை பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

- Advertisement -

புதுச்சேரி சிறுமி கொலை சம்பவம்:

அப்போது அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்யப்பட்டு தெள்ளத்தெளிவாக தெரிந்திருக்கிறது. பின் போலீஸ் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், இது சம்பந்தமாக போலீஸ் குற்றவாளிகளை கைது செய்து இருக்கிறார்கள். அந்த ஏரியாவில் கஞ்சா குடிக்கும் 19 வயது இளைஞனும், 58 வயது கொண்ட முதியவரும் சேர்ந்து கூட்டு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்கள். பின் விசாரணையில், அந்த இளைஞர் சிறுமிக்கு மொட்டை மாடியில் பாலியல் தொல்லை கொடுத்த போது அதை பார்த்த முதியவரும் தன்னுடன் சேர்ந்து கொண்டதாகவும் சிறுமி ரொம்ப கத்தி ஆர்ப்பாட்டம் செய்ததால் அடித்த அடியில் அவர் இறந்து விட்டதாக கூறியிருக்கிறார்.

போலீஸ் விசாரணை:

தற்போது இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் நெஞ்சை பதற வைத்து இருக்கிறது. இது குறித்து பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலருமே கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக நடிகரும் மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமலஹாசன் அவர்கள் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், புதுச்சேரியில் ஒன்பது வயது சிறுமி கடத்திக் கொல்லப்பட்டு சாக்கடையில் வீசப்பட்டிருக்கிறாள். உலகின் பாதி நாடுகளை சுற்றி பார்த்துவிட்டு இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டு பெண்ணை ராஞ்சியில் ஒரு கும்பல் வன்புணர்வு செய்திருக்கிறது.

-விளம்பரம்-

கமல்ஹாசன் பதிவு:

மங்களூரில் காதலிக்க மறுத்த பள்ளி மாணவியின் முகத்தில் ஆசிட் வீசப்பட்டிருக்கிறது. ஒரு சமூகமாக நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்? எனும் ஆழமான கேள்வியை இந்த சம்பவங்கள் ஏற்படுத்துகின்றது. மானுட நேயத்தை தொலைத்து விட்டு மிருக நிலைக்கு திரும்புவதை வளர்ச்சி என்று கருத முடியுமா? குற்றங்கள் எதுவாயினும், அதன் காரணிகள் எதுவாக இருந்தாலும் எல்லாவற்றுக்கும் பின்னாலும் இருப்பது மனிதத் தன்மையை மறுத்துப்போக செய்யும் போத பொருள்கள் தான். போதைப் பொருள்கள் சகஜமாக புழங்கும் தேசத்தில் பெண்களும் குழந்தைகளும் பாதுகாப்பாக வாழவே முடியாது. இதுதான் உண்மை.

லெனின் பாரதி பதில்:

இந்த சீரழிவை இரும்பு கரம் கொண்டு ஒடுக்காவிடில் எதிர்காலம் நம்மை மன்னிக்காது என்று கூறியிருக்கிறார். மேலும், கமலஹாசனின் இந்த பதிவை இணையத்தில் வைரலானதை தொடர்ந்து இந்த பதிவை இயக்குனர் லெனின் பாரதி ரீ ட்வீட் செய்து, எங்கே போகிறோம் என்று ஆராய்வதை போல் கதாநாயக வழிபாட்டு சினிமாக்கள் மூலம் ஆண் ஆதிக்கம், வன்முறை, போதை, வெற்றி பெருமை, வக்ரம், குரூரம் என இளைஞர்கள் மத்தியில் விஷ விதைகளை விதைத்து எங்கே கூட்டி வந்திருக்கின்றோம் என்று அறிய வேண்டிய பொறுப்பும் சினிமாக்காரர்களுக்கு இருக்கிறது என்று பதிவிட்டிருக்கிறார்.

Advertisement