எந்த வித முன் அறிவிப்புமின்றி தனது படத்தில் இருந்து இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரை தூக்கினாரா எம் ஜி ஆர் ?

0
4647
- Advertisement -

சினிமா உலகில் எஸ்.ஏ. சந்திரசேகர் அவர்கள் திரைப்பட இயக்குனர் மட்டுமல்லாமல், நடிகர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன் முகங்களை கொண்டவர். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் 70க்கும் மேற்பட்ட திரைப் படங்களை இயக்கி உள்ளார். இவர் இயக்கிய படங்கள் எல்லாமே மக்களிடையே நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்தது. 1981 ஆம் ஆண்டு வெளிவந்த ‘சட்டம் ஒரு இருட்டறை’ என்ற படத்தில் தான் எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் இயக்குனராக அறிமுகமானார். இவர் வெற்றி, நான் சிகப்பு மனிதன், நெஞ்சிருக்கும் வரை உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர். 40 வருடங்களுக்கு மேலாக சினிமா திரை உலகில் பணியாற்றி வருகிறார்.

-விளம்பரம்-

அதுமட்டுமில்லாமல் தற்போது சினிமா உலகில் முடிசூடா மன்னனாக கலக்கிக் கொண்டிருக்கும் தளபதி விஜய்யை உருவாக்கியதும் எஸ் ஏ சந்திரசேகர் தான். இவர் விஜய் மட்டுமில்லாமல் பல கலைஞர்களையும் உருவாக்கியுள்ளார். தளபதி விஜய் அவர்கள் இந்த அளவிற்கு புகழின் உச்சத்தில் இருப்பதற்கு காரணம் ஏ சந்திரசேகர் அவர்கள் தான். இந்நிலையில் எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் சமீபத்தில் “வொண்டர் வுமன் அவார்டு” என்ற விழாவில் கலந்து கொண்டார். அதில் அவர் ‘பிளாட்டினம் லேடி ஆப் தமிழ் சினிமா’ என்ற பிரிவில் பழம்பெரும் நடிகை லதா அவர்களுக்கு விருது வழங்கினார். நடிகை லதா அவர்கள் சினிமாவை உருவாக்கிய எம்ஜிஆர் மற்றும் சிவாஜி கணேசனின் ஆகியோர்களின் படங்களின் அவர்களுக்கு ஜோடியாக நடித்தவர்.

- Advertisement -

அதில் எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் துணை இயக்குனராக இருக்கும் போது நடந்த சம்பவங்களை பற்றி கூறியிருந்தார். அதில் அவர் கூறியது, ‘நாளை நமதே’ என்ற படத்தை இயக்கியவர் சேது மாதவன். அப்போது நான் இயக்குனர் சேதுமாதவன் அவர்களிடம் துணை இயக்குனராக இருந்தேன். எப்போதும் நடிகர் எம்.ஜி.ஆர். அவர்கள் ஷூட்டிங்க்கு வந்தாலே போதும் சூட்டிங் செட்டே ரொம்ப அமைதியாக இருக்கும். வேறு எந்த ஒரு சத்தமும் கேட்காது. ஒரு நாள் நாங்க பாட்டு ஒன்றுக்கு சூட்டிங் பண்ணிட்டு இருக்கும்போது லிப் சிங் கரெக்டாக இல்லாம இருந்தது. திடீரென்று நான் ஒன் மோர் என்று சொல்லி விட்டேன். உடனே நடிகர் எம்.ஜி.ஆர். அவர்களும் ஓகே என்று சொல்லி செய்தார். அவர் ஷூட்டிங் முடிந்தவுடன் என்னைக் கூப்பிட்டு என் தோள் மீது கை போட்டு நீ பெரிய இயக்குனராக வருவ என்று பாராட்டினார். நானும் சந்தோசப்பட்டேன். ஆனால், மறுநாள் என்னை கூட்டிட்டு போறதுக்கு கார் வரவே இல்லை.

நானும் ஒரு ஆட்டோ பிடித்து சூட்டிங்க்கு வந்துவிட்டேன். அங்க என்னை உள்ளேயே விடவே மாட்டுகிறாங்க. பின் இயக்குனர் சேதுமாதவன் அவர்கள் வந்து என்கிட்ட நம்ப அடுத்த படத்துல ஒன்று சேர்ந்து பண்ணலாம். இந்த படம் வேனாம் என்று சொன்னாரு. எனக்கு ஒரே ஷாக். அதுக்கப்புறம் தான் நான் படங்களை இயக்க ஆரம்பித்தேன். அவர் சொன்ன மாதிரி 70 படங்கள் இயக்கி இயக்குனராக இருக்கிறேன் என்று கூறினார்.

-விளம்பரம்-

இந்நிலையில் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் இயக்கிய 70 வது திரைப்படம் “கேப்மாரி”. இந்த படத்தில் ஜெய், அதுல்யா ரவி, வைபவி சாண்டில்யா, விபின் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்த படம் இன்றைய இளைஞர்கள் செய்யும் அட்டூழியங்களையும், போடும் ஆட்டங்களையும் வெட்ட வெளிச்சமாக சுட்டிக்காட்டி, அதனால் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை மையமாக வைத்து உருவான கதை ஆகும். இந்த படம் வெளியாகி சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தியது.

Advertisement