மலையாள சினிமாவில் மிக பிரபலமான இயக்குனர் ஜீத்து ஜோசப். இயக்குனர் ஜீத்து ஜோசப் இடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் விவேக். நாயின் உயிரை காப்பாற்ற அநியாயமாக இயக்குனர் விவேக் உயிர்இழந்தார். தற்போது இந்த நியூஸ் மலையாள சினிமா உலகில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜீத்து ஜோசப் இடம் உதவி இயக்குனராக இருந்து உள்ள போது த்ரிஷ்யம் என்ற படத்தில் பணியாற்றி உள்ளார். தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த படம் “பாபநாசம்”. இந்த படத்தை இந்த மலையாள மொழியில் இருந்து தான் எடுக்கப்பட்டது. இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. அதுமட்டும் இல்லமால் தற்போது சீனா மொழியில் கூட இந்த படம் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. அந்த அளவிற்கு பிளாக் பஸ்டர் கொடுத்த படம்.
இந்த படத்தில் தான் விவேக் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்தார். பின்னர் மெமரிஸ் என்ற படத்திலும் பணியாற்றி உள்ளார். இந்நிலையில் அடுத்த படம் இயக்குவதற்கான முயற்சியில் விவேக் தீவிரமாக இருந்து உள்ளார். விவேக் அவர்கள் தமிழில் சில குறும் படங்களையும் இயக்கி உள்ளார். மேலும், அசோகன், பபிதா பஷீர், ஜேம்ஸ் உட்பட பலர் நடித்து வெளியான மலையாள படம் ஓர்மயில் ஒரு ஷிஷிரம். இந்தப் படத்தை இயக்கி இருந்தவர் விவேக் ஆர்யன் தான். விவேக் அவர்கள் கடந்த மாதம் 22 ஆம் தேதி தனது மனைவி அம்ருதா உடன் திருச்சூர் அருகில் உள்ள கொடுங்கல்லூரில் பைக்கில் சென்று கொண்டு இருந்தார்.
இதையும் பாருங்க : நயன்தாரவின் இந்த சமீபத்திய செயலால் கடுப்பில் ரஜினி, விஜய், அஜித் ரசிகர்கள். காரணம் இது தான்.
அப்போது திடீரென்று வண்டியின் குறுக்கே நாய் வந்து உள்ளது. நாயின் உயிரை காப்பாற்ற இயக்குனர் விவேக் அவர்கள் வண்டியை திருப்பி உள்ளார். அப்போது எதிர்பாராமல் வண்டி நிலை தடுமாறி இயக்குனர் விவேக், அவரது மனைவி அம்ருதா இருவரும் கீழே விழுந்து உள்ளார்கள். இந்த விபத்தில் இயக்குனர் விவேக் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. இதை அடுத்து எர்ணாகுளத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இவர்கள் இருவரையும் சேர்த்து உள்ளார்கள்.
விவேக்கிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளதால் இவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று இவருக்கு கொடுத்த சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். இயக்குனர் விவேக் அவர்களுக்கு தற்போது முப்பது வயது தான் ஆகுகிறது. இந்த சிறு வயதில் அநியாயமாக உயிரிழந்து உள்ளதால் மலையாளத் திரையுலகமே அதிர்ச்சியில் உள்ளது. அவரது இறுதி சடங்கு இன்று நடக்கிறது. இயக்குனர் விவேக் இறப்பு குறித்து பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சோகமான நிகழ்வு சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.