தயவு செஞ்சி அவர் பையன தயார் பண்ணிடுங்க, அவருக்கு பாட்றதுக்கு தயார் – எஸ் பி பி யின் சூப்பர் வீடியோ.

0
13818
spb
- Advertisement -

பிரபல பின்னணி பாடகரான எஸ் பி பாலசுப்ரமணியம் காலமான சம்பவம் ஒட்டு மொத்த திரையுலகையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது. கொரோனா தொற்று பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 51 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த  எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கடந்த வெள்ளிக்கிழமை , செப்டம்பர் 25 பிற்பகல் மரணம் அடைந்தார். எஸ்.பி பாலசுப்பிரமணியம் மறைவு திரையுலகத்தினரை கண்ணீர் கடலில் ஆழ்த்தியது.

-விளம்பரம்-
https://www.facebook.com/TrollCinemaOffl/videos/387698972240086

எஸ் பி பியின் மறைவிற்கு நாட்டின் பிரதமர் துவங்கி பாலிவுட், டோலிவுட் வரை இருக்கும் பல்வேறு பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்தனர். மேலும், பல்வேறு தமிழ் நடிகர், நடிகைகளும் எஸ் பி பியின் உடலுக்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்தனர். அதே போல எஸ் பியின் மறைவிற்கு நடிகர் விஜய் கூட நேரில் சென்று தனது இரங்கலை தெரிவித்து இருந்தார்.இதை தொடர்ந்து நேற்று (செப்டம்பர் 26) எஸ் பி பியின் உடல் 72 குண்டுகள் முழங்க அவரது சொன்ன கிராமத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

- Advertisement -

எஸ் பி பியின் மறைவை தொடர்ந்து அவரது பல்வேறு நினைவுகளை பற்றி இணையத்தில் பலர் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற எஸ் பி பி, நடிகர் விஜய்யின் தந்தையிடம் உங்கள் மகனுக்கு நான் பாடி இருக்கிறேன். அவரது மகனை தயார் செய்து வைக்க சொல்லுங்கள். அவரது மகனுக்கும் நான் பாட தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் எஸ் பி பி. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

பாடகர் எஸ் பி பாடகர் என்பதையும் தாண்டி. கேளடி கண்மணி, குனா, திருடா திருடா, காதலன், அவ்வை ஷண்முகி என்று பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். அதே போல விஜய் நடிப்பில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான ‘பிரியமானவளே’ படத்தில் கூட விஜய்யின் அப்பாவாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தேவா படத்தில் ‘ஒரு கடிதம் எழுதினேன்’ லவ் டுடே படத்தில் ‘என்ன அழகு’ கண்ணுக்குள் நிலவு படத்தில் ஒருநாள் ஒரு கனவு, யூத் படத்தில் ‘சந்தோசம்’ போன்ற எண்னெற்ற பாடலை கூட எஸ் பி பி பாடி இருந்தார்.

-விளம்பரம்-
Advertisement