மக்களிடம் பொய் சொல்லி ஒரு விளம்பரத்தில் நடிக்க முடியுமா ? பெருந்தன்மையாக மறுத்த சாய் பல்லவி. ஆனால், இந்த நடிகை நடித்து கொடுத்திருக்காங்க.

0
1700
sai

பொதுவாக சினிமாவில் இருக்கும் நடிகர், நடிகைகள் சினிமாவில் சம்பாதிப்பதை விட விளம்பர படங்களில் மூலம் கோடிகளில் சம்பாதித்து விடுகின்றனர். ஆனால், அதற்கு சாய் பல்லவி விதிவிலக்காக இருந்து வருகிறார். மலையாள நடிகையான சாய் பல்லவி மலையாளத்தில் வெளியான ‘ப்ரேமம்’ திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். இந்த படத்தில் மூன்று கதாநாயகிகள் நடித்திருந்தாலும், மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்த சாய் பல்லவி தான் மிகவும் பிரபலமானார்.

வீடியோவில் 11 நிமிடத்தில் பார்க்கவும்

தமிழில் கஸ்தூரி மான் என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமான சாய் பல்லவி, இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளியான ‘தியா’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘மாரி 2’ படத்தில் நடித்திருந்தார். இறுதியாக சூர்யா நடிப்பில் வெளியான ‘என் ஜி கே’ படத்தில் நடித்திருந்தார்.

- Advertisement -

சமீபத்தில் நடிகை சாய் பல்லவியை அழகு சாதன நிறுவனம் ஒன்று அணுகி தங்களது விளம்பரத்தில் நடிக்க கேட்டுள்ளனர்.அந்த விளம்பரத்தில் நடிப்பதற்காக அதற்கு 2 கோடி சம்பளமும் பேசியுள்ளனர். ஆனால், அந்த விளம்பரத்தில் நடிக்க சாய் பல்லவி மறுத்துள்ளார்.என் தங்கைக்கு அவளை விட நான் வெள்ளையாக இருக்கிறேன் என்ற ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்தது.வெள்ளையாக வேண்டும் என்பதற்காக அவர் காய் மற்றும் பழங்களை சாப்பிட்டால். அப்போது தான் நான் உணர்தேன் வெள்ளை ஆக வேண்டும் என்பதற்காக அவள் தனக்கு பிடிக்காததை கூட செய்தால்.

அப்படி இருக்க நானே கிரீம் தடவினால் வெள்ளை ஆகலாம் என்று மக்களிடம் பொய் சொல்லி ஒரு விளம்பரத்தில் நடிக்க முடியுமா. அப்படி வரும் பணத்தில் நான் என்ன காண போகிறான். அந்த பணத்தை வைத்து நான் அதே சாப்பாட்டை தான் சாப்பிட போகிறேன். நம்மை சுற்றியுள்ளவர்களை நாமே ஏமாற்ற கூடாது என்று கூறியிருந்தார் சாய் பல்லவி. ஆனால், அந்த விளம்பரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement