இறப்பதற்கு ஒரு நாள் முன்பு மணிரத்னம் படத்தில் நடிக்க ஆசைப்பட்ட சிவாஜி – அவரை வைத்து படம் எடுக்காத காரணம் சொன்ன மணிரத்னம்.

0
3779
Sivaji
- Advertisement -

இன்று பிறந்தநாள் கொண்டாடும் இயக்குனர் மணிரத்தினம் குறித்து பலரும் அறியாத சுவாரசியமான தகவல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் மணிரத்தினம். இவர் வித்யாசமான கதைகளை இயக்கி உலகிற்கு கொடுப்பதில் கைத்தேர்ந்தவர். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதையை இரண்டு பாகங்களாக இயக்கி இருந்தார் மணிரத்னம்.

-விளம்பரம்-

இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், கார்த்தி, ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ரகுமான், கிஷோர், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, பாலாஜி சக்திவேல் என சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். மேலும், இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி இருந்தது.

- Advertisement -

பொன்னியின் செல்வன் படம்:

இந்த படத்தின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த படம் பிரம்மாண்டமாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த இரண்டு பாகங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் மணிரத்தினம் உற்சாகத்தில் இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இன்றைய காலகட்ட இயக்குனர்களுக்கும் போட்டியாக மணிரத்தினம் இருக்கிறார் என்றெல்லாம் கூறுகிறார்கள்.

மணிரத்தினத்தின் 67வது பிறந்தநாள்

மேலும், இன்று இயக்குனர் மணிரத்தினத்தின் 67வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டிருக்கிறது. இந்நிலையில் மணிரத்னம் குறித்து பலரும் அறிந்திடாத சில சுவாரசியமான தகவல்களைப் பற்றி இங்கு பார்க்கப் போகிறோம். மணிரத்னத்தின் உண்மையான பெயர் சுப்பிரமணியன். சினிமாவுக்காக தனது பெயரை மணிரத்னம் என்று மாற்றிக்கொண்டார். மேலும் இவர் யாரிடமும் உதவியாளராக பணியாற்றது கிடையாது. அவரது மானசீக குரு பணியாற்றது அது அகிரா குரோசோவா.

-விளம்பரம்-

மணிரத்தினம் குறித்த தகவல்:

தான் இயக்குநர் ஆவதற்கு முன்னர் படத்தயாரிப்பு மற்றும் பட விநியோகத் துறையில் இருந்திருக்கிறார். இவர் இயக்குனராக ஆவதற்கு காரணம் இயக்குனர் வீணை எஸ் பாலச்சந்தர், சிவாஜி, நாகேஷ் ஆகியோருடைய படங்களை பார்த்து தான். மேலும், இவருடைய படங்களில் ரயில் சீக்குவன்ஸ்கள், மழை, கண்ணாடி முன்னாடி நின்று பேசும் காட்சிகள், சில்க் அவுட்ஸ் காட்சிகள் ஆகியவை கண்டிப்பாக இடம் பெறும். இதை அவர் ஒவ்வொரு படத்திலும் டிரேட் மார்க்காகவே கடைப்பிடித்து வருகிறார்.

சிவாஜி குறித்து சொன்னது:

இவர் தினமும் காலை 4 மணிக்கு எழுந்து கோல்ப் மைதானம் செல்வார். காலை 7:00 மணி வரை கோல்ப் விளையாடுவது தான் வழக்கம். சிவாஜி கணேசன்- மணிரத்தினம் பிளாஷ் பேக் சம்பவம் ஒன்று. அதாவது, நடிகர் திலகம் மரணப்படுக்கையில் இருந்தபோது அதே மருத்துவமனையில் ஹார்ட் அட்டாக் வந்து மணிரத்தினம் சிகிச்சை பெற்று இருந்தார். அப்போது சிவாஜி அவர்கள் மண மணிரத்தினத்தின் மகன் நந்தனை அழைத்து உங்க அப்பன் கிட்ட சொல்லி எனக்கு ஒரு சான்ஸ் வாங்கி கொடுடா என்று கேட்டிருந்தார். இது சொல்லி அடுத்த நாளில் சிவாஜி இல்லை. சிவாஜியை வைத்து படம் எடுக்க வேண்டும் என்று மணிரத்தினம் ஆசைபட்டார். அது கனவாகவே போனது. இதைப் பற்றி நிறைய இடங்களில் மணிரத்தினமும் கூறி இருக்கிறார்.

Advertisement