இளையராஜாவின் அந்த வீடீயோவை சரண் போட்டு காண்பித்த போது எஸ் பி பி இதை தான் செய்தாராம் – இதான் நட்பு.

0
3183
spb
- Advertisement -

தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பி உடல்நலக் குறைவால் நேற்று (செப்டம்பர் 25) காலமாய்யுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் எஸ் பி பி மருத்துவமனையில் இருந்த போது நடந்த சம்பவம் ஒன்றை இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார். பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா நோய் தொற்று உறுதியானதால் கடந்த 5-ம் தேதி, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

-விளம்பரம்-

கொரோனா தொற்றில் இருந்து அவர் மீண்ட போதும் அவருக்கு ஏற்பட்ட உடல் நிலை கோளாறு காரணமாக நேற்று மதியம் 1.04 மணி அளவில் அவர் உயிரிழந்தாக மருத்துவ குழுவினர் அறிவித்து இருந்தனர்.இதை தொடர்ந்து இன்று (செப்டம்பர் 26) எஸ் பி பியின் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் திருவள்ளூர் மாவட்டம் தாமரைபாக்கத்தில் உள்ள அவரது நிலத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

- Advertisement -

எஸ் பி பியின் மறைவிற்கு முன்னர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார் இளையராஜா ,’ நம்முடைய வாழ்வு வெறும் சினிமாவில் மட்டும் முடிந்து போவது அல்ல. சினிமா மூலம் துவங்கியதும் அல்ல. எங்கேயோ மேடை கச்சேரிகளில் நாம் ஒன்று சேர்ந்து ஆரம்பித்த அந்த இசை நிகழ்ச்சி . அந்த இசை நமது வாழ்வாகவும் நமக்கு முக்கியமான வாழ்வுக்கு ஆதாரமாகவும் அமைந்தது. அந்த மேடை கச்சேரிகளில் ஆரம்பித்த நமது நட்பும் இசையும் இசை எப்படி ஸ்வரங்களை விட்டு ஒன்றோடு ஒன்று பிரியாமல் இருக்கிறதோ அதே போல உனது நட்பும் என்னுடைய நட்பும் நமது எந்த காலத்திலும் பிறிவைது இல்லை.

நாம் சண்டை போட்டாலும் சரி, நாம் இருவருக்குள் சண்டை இருந்தாலும் அது நட்பே. சண்டை இல்லாமல் போனபோதும் அது நட்பு என்பதை நீயும் நன்றாக அறிவாய் நானும் நன்றாக அறிவேன். அதனால் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் நீ நிச்சயமாக திரும்பி வருவாய் என்று என்னுடைய உள் உணர்வு சொல்கிறது. அதை உண்மையாக நடக்கட்டும் என்று இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் சீக்கிரம் வா என்று கூறியிருந்தார்.

-விளம்பரம்-

மேலும், எஸ் பி பி மறைவிற்கு பின்னர் வீடியோ வெளியிட்ட இளையராஜா ”பாலு சீக்கிரம் எழுந்துவா உன்னை பாக்க நா காத்திருகேன்னு சொன்னேன். கேட்கல நீ கேட்கல போய்ட்ட எங்க போன? கந்தர்வர்களுக்கு பாடுறதற்காக போய்விட்டாயா? இங்க உலகம் ஒரு சூனியாமா போச்சு உலகத்தில ஒன்னும் எனக்கு தெரில. பேசறதுக்கு பேச்சு வரல, சொல்றதுக்கு வார்த்தை இல்லை. என்ன சொல்றதுனே தெரியல. எல்லா துக்கத்திற்கும் ஒரு அளவு இருக்கு, இதுக்கு அளவு இல்லை.’ என்றுகூறி இருந்தார் .

இளையராஜா பேசிய அந்த வீடியோவை அடிக்கடி சரண் எஸ்பிபி போட்டுக் காண்பிப்பார் பொதுவாக இதுபோல ஏதாவது காட்டினால் அதற்கு அவர் சின்னதாக ஒருசைகையையோ அல்லது புன்னகையோ தான் கொடுப்பார். ஆனால் இளையராஜாவின் வீடியோவை போட்டபோது எஸ் பி பி, சரனை அருகில் அழைத்து அவரிடம் போனை வாங்கி முத்தம் கொடுத்தார். அவர் பெரிதாக அசைவு கொடுத்தது அப்போதுதான் என்று’ என்று எஸ் பி பிக்கு சிகிச்சை பார்த்த டாக்டர் தீபக் சுப்ரமணியம் கூறியுள்ளார்.

Advertisement