அஜித்தால் தான் நான் தமிழ் சினிமாவில் இருக்கிறேன் – மேடையில் பேசிய சூர்யா. ரீ-வைண்ட் வீடியோ இதோ.

0
2003
ajithsurya
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சூர்யா. 1997 ஆம் ஆண்டு வசந்த் இயக்கத்தில் வெளிவந்த நேருக்கு நேர் படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவரின் முதல் படமே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதற்கு பிறகு நடிகர் சூர்யா அவர்கள் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் சூர்யா அவர்கள் தல அஜித் குறித்து பேசிய வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-
விஜய், அஜித்துடன் ஒரே படத்தில் ...
நேருக்கு நேர் படத்தில் அஜித் நடித்த காட்சி

அதில் சூர்யா அவர்கள் கூறியது, நேருக்கு நேர் படத்தில் பல காரணங்களால் அஜித் சாரால் நடிக்க முடியவில்லை. அதனால் தான் எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. அவரால் தான் நான் தமிழ் சினிமாவில் இருக்கிறேன் என்று கூட சொல்லலாம். எப்பவுமே தல அஜித் ரொம்ப தைரியமான துணிச்சலான மனிதர். படங்களில் புதுப்புது கதாபாத்திரங்களில் நடிப்பார்.

- Advertisement -

படங்களில் எதாவது ஒரு வித்தியாசத்தை கொடுக்க வேண்டும் என்று ஒரு புது முயற்சி செய்து கொண்டே இருப்பார். அதற்கேற்ற மாதிரி அவருக்கும் அமைந்தது என்று பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். இப்படி நடிகர் சூர்யா அவர்கள் பேசிய தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தற்போது இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் “சூரரைப் போற்று”.

இந்த படத்தின் டீசர் சமீபத்தில் தான் வெளியானது. இந்த படம் ஏர் டெக்கான் நிறுவனத்தை நிறுவிய ஜி.ஆர். கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. தல அஜித் அவர்கள் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் எல்லாம் ரகசியமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தின் ரிலீஸ்க்காக ரசிகர்கள் எல்லாம் ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

-விளம்பரம்-
Advertisement