சூப்பர் ஸ்டாரிடம் சுஷாந்த்தை அறிமுகம் செய்யும் தோனி. நெகிழ்ந்த சுஷாந்த் – வைரலாகும் வீடியோ.

0
3504
- Advertisement -

கடந்த சில தினங்களாகவே கொரோனா தாக்கத்தையும் மறந்து போய் இந்திய திரையுலகையையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்திய விஷயம் இளம் நடிகர் சுஷாந்த் சிங்கின் தற்கொலை தான். நடிகர் சுஷாந்த் ஆரம்பத்தில் தொலைக்காட்சி தொடரில் நடித்து வந்தார். பின்னர் குரூப் டான்சராகவும், சிறு சிறு கதாபாத்திரத்திலும் நடித்து சினிமாவில் கால் தடம் பதித்தார். பின் எம்.எஸ் தோனியின் வாழ்கை வரலாற்று படத்தில் ரீல் தோனியாகவே மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். பிறகு பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்தார்.

-விளம்பரம்-
sushant

தொடர்ந்து படங்களில் நடித்து வந்த சுஷாந்த் கடந்த சில மாதங்களாகவே மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும், மருத்துவ ஆலோசனைகளை மேற்கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஞாயிற்று கிழமை தனது அடுக்குமாடி குடியிருப்பில் சுஷாந்த் சிங் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். சுஷாந்த் சிங் இறப்பு ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

- Advertisement -

தற்போது இவருக்கு 34 வயது தான் ஆகிறது. இவர் தற்கொலை குறித்து சோசியல் மீடியாவில் பல விதமான சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் நடிகர் சுஷாந்த் சிங், சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்த போது எடுத்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. எம்எஸ் தோனி உடன் சேர்ந்து சுஷாந்த் சிங் சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்திக்க அவருடைய இல்லத்திற்கு சென்று இருந்தார். அப்போது எம்எஸ் தோனி untold story திரைப்படம் வெளியாகி இருந்தது.

https://www.instagram.com/p/CBnkcVqhkUg/

கேப்டன் தோனி அவர்கள் சுஷாந்த் சிங்கை ரஜினிக்கு அறிமுகப்படுத்தி எம்எஸ் தோனி படம் குறித்தும், சுஷாந்த் சிங் குறித்தும் பேசி இருந்தார். அப்போது சுஷாந்த் சிங் பதட்டமான சூழ்நிலையில் இருந்தார் என்பது தெள்ளத்தெளிவாக வீடியோவில் காணப்படுகிறது. தற்போது இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement