சிம்பு-ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காதல் குறித்து நடிகர் காதல் சுகுமார் அளித்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக தனுஷ் திகழ்ந்து வருகிறார். இவர் பல வெற்றிப் படங்களை கொடுத்து இருக்கிறார். தனுஷ் அவர்கள் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர், திரைப்பட இயக்குனர் என பல துறைகளில் சாதித்து வருகிறார்.
அதிலும் சமீப காலமாகவே இவர் கோலிவுட், டோலிவுட், பாலிவுட், ஹாலிவூட் என அணைத்து மொழிகளிலும் கால் தடம் பதித்து வருகிறார். இதனிடையே நடிகர் தனுஷ் அவர்கள் 2004 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினியின் முத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா , லிங்கா என்று இரண்டு மகன்கள் உள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் இருவரும் பிரிவதாக சமூக வலைதள பக்கத்தில் அறிவித்து இருப்பது பலருக்கும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது.
தனுஷ்-ஐஸ்வர்யா பிரிவு:
மேலும், 18 ஆண்டு திருமண வாழ்வில் இருந்து இருவரும் பிரிவதாக கூறி இருக்கும் பதிவு சோசியல் மீடியாவில் பயங்கர பேசும் பொருளாக இருந்தது. மேலும், இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என பலரும் பல முயற்சிகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஐஸ்வர்யா – சிம்பு காதல் குறித்த விவகாரம் ஒன்று சோஷியல் மீடியாவில் வெளிவந்துள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் சிம்பு.
சிம்பு-ஐஸ்வர்யா காதல்:
இவர் நயன்தாரா, ஹன்சிகாவை காதலித்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால், இவர் முதன் முதலாக ஐஸ்வர்யா ரஜினிகாந்தை தான் காதலித்திருக்கிறார். பின் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் சிம்புவிற்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டார்கள். அதோடு ரஜினிகாந்தும் இவர்களுடைய காதலுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. அதற்குப் பிறகுதான் ஐஸ்வர்யா, தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
காதல் சுகுமார் அளித்த பேட்டி:
இதை வைத்து தான் சிம்பு அவர்கள் மன்மதன் படத்தை எடுத்து இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இதுகுறித்து காதல் சுகுமார் அவர்கள் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருந்தது, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கல்யாண பத்திரிக்கை டி.ராஜேந்தரன் சார் வீட்டிற்கு வந்திருக்கிறது. அப்போது காதல் குகன் டி ராஜேந்திரன் வீட்டிற்கு வந்தார். அவர், மன்மதன் படத்தில் உங்கள் பையன் பின்னி விட்டார். படத்தையே அவர் தான் தாங்கி இருக்கிறார்.
டி ஆர் கோபப்பட காரணம்:
ஆனால், வேறு ஒருவர் பெயரை போட்டிருக்கிறார்கள் என்று சொல்லிக் கீழே பார்க்கிறார். ஐஸ்வர்யா கல்யாண பத்திரிக்கை இருக்கிறது. அதை பார்த்தவுடன் எல்லாத்தையும் விட்டுக் கொடுத்தார் என்றால் இந்த கல்யாணத்தையும் விட்டுக் கொடுப்பதா? என்று கேட்கிறார். உடனே, டிஆருக்கு கோபம் வந்து, தன்னை நம்பி சூப்பர் ஸ்டாரானவன் என் பையன், மத்தவங்க பொண்ண நம்பி ஆணவன் இல்லடா என்று கோபமாக பேசினார் என்று கூறி இருக்கிறார். இப்படி இவர் பேசியிருந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.