எனக்கு புடிக்கல, என்னால முடியாது, நான் லண்டன் போறேன் – படப்பிடிப்பில் திட்டியதால் கோபித்து கொண்ட திரிஷா. யார் திட்டியது பாருங்க.

0
572
trisha
- Advertisement -

இந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடன கலைஞராக திகழ்பவர் கலா மாஸ்டர். இவர் மானாட மயிலாட என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானார். இந்த நிகழ்ச்சியை பல பாகங்களாக கொண்டு சென்றார்கள். மேலும், இவர்களுடைய குடும்பமே நடன குடும்பம் என்ற சொல்லலாம். இவருடைய மைத்துனர் மாஸ்டர் ரகுராம் மூலம் தான் இவருக்கு திரைப்படத்துறையில் வாய்ப்பு கிடைத்தது. இவர் தன்னுடைய 12 வயதிலிருந்து நடன உதவியாளராக பணியாற்றி வருகிறார்.1989 ஆம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான புது புது அர்த்தங்கள் என்ற படத்தின் மூலம் தான் இவர் நடன இயக்குனராக அறிமுகமானார்.

-விளம்பரம்-

பின் இவர் 30 வருடத்திற்கு மேலாக இந்திய சினிமாவில் முக்கிய நடன இயக்குனராக பங்கு வகித்து வருகிறார். இவருடைய சகோதரி பிருந்தாவும் பிரபல நடன இயக்குனர் ஆவார். மேலும், கலா மாஸ்டர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், ஒரியா, பெங்காலி, ஆங்கிலம், இத்தாலியன் ஆகிய பல மொழிகளில் 4000க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். தற்போது கலா மாஸ்டர் நடிகையாக சினிமா உலகில் அறிமுகமாக இருக்கிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் காத்துவாக்குல இரண்டு காதல்.

- Advertisement -

நடிகையாக களமிறங்கும் கலா மாஸ்டர்:

இந்த படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் முழுக்க முழுக்க ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகி உள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதேபோல் இந்த படத்தின் மூலம் நடன இயக்குனர் கலா மாஸ்டர் நடிகையாக அறிமுகமாகிறார். இப்படத்தில் அவர் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இத்தனை வருடங்களாக திரைக்குப் பின்னால் ஜொலித்துக் கொண்டிருந்த கலா மாஸ்டர் முதல் முறையாக திரைக்கு முன் தோன்ற இருக்கிறார்.

கலா மாஸ்டர் அளித்த பேட்டி:

இதனால் இவரை திரையில் பார்ப்பதற்கு ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில் கலா மாஸ்டர் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் நடிகைகள் நடனம் ஆடியது குறித்தும், நடிகர்களுக்கு நடனம் சொல்லித் தரும்போது ஏற்படும் பிரச்சனைகளை குறித்தும் பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறியது, நான் நடிகர், நடிகைகளுக்கு நடனம் சொல்லித் தரும்போது பல பிரச்சனைகளை சந்தித்து இருக்கிறேன் திரிஷா என்று பல நடிகைகளுக்கு நடனம் சொல்லித் தரும்போது சில சிக்கல்கள் ஏற்பட்டு இருக்கிறது.

-விளம்பரம்-

திரிஷாவை திட்டிய கலா மாஸ்டர்:

நான் சொல்லித் தரும் ஸ்டெப் அவர்களுக்கு வரவில்லை என்றால் உடனே நாங்கள் மாற்றிக் கொள்வோம். ஏன்னா, அவர்களைக் கஷ்டப்படுத்தி வர வைக்க முடியாது. அங்களுடைய முகபாவமும் மாறும். என்னால் மறக்க முடியாத ஒரு பாடல் என்றால், லேசா லேசா என்ற பாடல் தான். அந்த படம் 1 வருடத்திற்கும் மேலாக எடுக்கப்பட்டது. மேலும், அந்தப் பாடலுக்காக அழகான செட் போட்டிருந்தார்கள். அந்தப் பாடலின் போது ஒரு சின்ன முமண்ட் பெண்ட் பண்ணி எலனும். ஆனால், அது திரிஷாவிற்கு வரவில்லை. அவள சொல்லி குற்றமில்லை. பின் நான் சூட்டிங்கை முடிக்கணும் இப்படிப் பண்ணால் எப்படி என்று கொஞ்சம் கோபவமாக பேசினேன்.

ஷூட்டிங்கில் திரிஷா பண்ணது:

உடனே திரிஷா கோபப்பட்டு மேக்கப் ரூமுக்கு சென்று எனக்கு இது பிடிக்கவில்லை. நான் என்னுடைய அப்பா இருக்கும் லண்டனுக்கு போகிறேன் என்று கத்த ஆரம்பித்து விட்டாள். அய்யயோ என்னடா ஆச்சு, பாட்டு வேற முடிக்க வேண்டுமே என்று எனக்கு என்ன பண்ணுவது என்று புரியாமல் திரிஷாவின் அம்மாவிடம் பேசினேன். அதற்குப் பிறகு திரிஷாவிடம் பேசி எடுத்தோம். அதேபோல் ஜோதிகாவை ஹிந்தியில் ஒரு பாடல் எடுக்கும் போது எனக்கு திட்டவே தோன்றவில்லை. ஜோதிகா ரொம்ப அமைதியா குழந்தை மாறி இருந்தார். காரிடாரில் ஓடிவர வேண்டும். ஆனால், ஜோதிகாவிற்கு ஒழுங்காக ஓடி வர தெரியவில்லை. ஆனால், அடுத்த படத்தில் பார்க்கும் போது பயங்கர ட்ரான்ஸ்போர்மேஷன். எல்லாமே மாறி அருமையாக நடித்திருந்தார் என்று
கூறினார்.

Advertisement