வணக்கம் இந்த வாரம் ஊட்டியிலிருந்து, இந்த வாரம் மதுரையிலிருந்து,இந்த வாரம் கோயம்புத்தூரிலிருந்து என்ற இந்த வார்த்தைகளை கண்டிப்பாக 90ஸ் கிட்ஸ்கள் தற்போதும் மறந்திருக்க மாட்டார்கள். சன் டிவியில் ஒளிபரப்பான பல்வேறு தொடர்கள் 90 கிட்ஸ் மத்தியில் மனதிலிருந்து இன்றும் நீங்காமல் இருக்கிறது. அந்த வகையில் நீங்கள் கேட்ட பாடல் என்று நிகழ்ச்சியும் ஒன்று. சன் டிவியில் ஒளிப்பரப்பான பிரபலமான நிகழ்ச்சி தான் நீங்கள் கேட்ட பாடல். 90 காலகட்டத்தில் சன் டிவியில் மிகப் பிரபலமான நிகழ்ச்சியாக ஒளிபரப்பான நீங்கள் கேட்ட பாடல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் விஜயசாரதி.
இவரை இன்றும் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். இவர் ஊர் ஊராக சென்று நேயர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு விருப்பமான பாடல் கேட்டு தொலைக்காட்சியில் போட்டு வந்தார். அதுமட்டும் இல்லாமல் இவர் தொலைக்காட்சி தொகுப்பாளர்களில் சூப்பர் சீனியர் என்று சொல்லாம். விஜய் சாரதி படித்து முடித்த பட்டதாரி ஆவார். படிப்பு முடிந்தவுடன் ஒரு மார்க்கெட்டிங் கம்பெனியில் வேலை செய்து வந்தார். அதன் பின்னர் யதேச்சையாக தான் சன் டிவி ஆடிசனில் கலந்துகொண்டு செலக்ட் ஆனார்.
விஜயசாரதி பற்றிய தகவல்:
அதன் பின்னர் வந்ததது தான் நீங்கள் கேட்ட பாடல் நிகழ்ச்சி. பின் இதன் மூலம் இவருக்கு நாடகங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதனை தொடர்ந்து இவர் சிரியல்கள், படங்களிலும் நடித்தார். பலருக்கும் இந்த ஷோ ஒரு பேவர்ட் ஷோ’வாக இருந்தது. இந்த நிகழ்ச்சியின் மூலம் பெரிய பிரபலம் ஆனார் விஜய் சாரதி. அதுமட்டும் இல்லாமால் இவர் விஜய், அஜித், ரஜினி, கமல் என பலரையும் பேட்டி எடுத்து உள்ளார். பின் நடுவில் கொஞ்சம் காணாமல் போய்விட்டார்.
விஜயசாரதி பேட்டி எடுத்த பிரபலம்:
நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான சைத்தான் படத்தில் ஒரு ஆட்டோ ஓட்டுநராக நடித்திருந்தார். இந்நிலையில் விஜயசாரதி தொகுப்பாளராக இருந்தபோது பல பிரபலங்களைப் பேட்டி எடுத்திருக்கிறார். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. அந்த வகையில் இவர் தொகுப்பாளராக இருந்தபோது நடிகை திரிஷாவை பேட்டி எடுத்திருக்கிறார். தற்போது அந்த வீடியோவை விஜயசாரதி சோசியல் மீடியாவில் பகிர்ந்திருக்கிறார்.
த்ரிஷாவின் திரைப்பயணம்:
திரிஷா தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக ஆரம்பித்த போது எடுக்கப்பட்ட இன்டர்வியூ. அப்போது மாடல்களாக இருந்த நடிகைகள் பலர் திரிஷாவிடம் கேள்வி கேட்டிருக்கிறார்கள். அப்போது அஞ்சலி, ஸ்ரீதிவ்யா போன்ற பல நடிகைகள் மாடலாக இருந்த தருணம். ஏன்னா, திரிஷா மாடலிங் மூலம்தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இவர் மாடலிங்கில் பல படங்களை பெற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அஞ்சலி- திரிஷா சேர்ந்து நடித்த படம்:
அதனால் அவரிடம் மாடலிங் குறித்தும், நடிப்பு குறித்தும் பல சுவாரசியமான விஷயங்களை கேட்டிருக்கிறார்கள். அதற்கு திரிஷாவும் பதில் அளித்திருக்கிறார். இப்படி இவர்கள் பேசி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மாடலாக இருந்த அஞ்சலி தற்போது தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகையாக நடித்து கொண்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் திரிஷா உடனே சேர்ந்து இவர் சகலகலா வல்லவன் என்ற படத்திலும் நடித்திருந்தார்.