ப்ரபா – சக்தி நிஜ திருமணம் எப்போது ? பகல் நிலவு ஜோடி கலகலப்பு பேட்டி !

0
14195
pagal-nilavu
- Advertisement -

‘பகல் நிலவு’ சீரியல்மூலம் தமிழில் நுழைந்து, ‘றெக்கை கட்டி பறக்குது மனசு’ சீரியலில் மலர் டீச்சராக மனதை ஈர்த்துவருபவர் சமீரா ஷெரீப். இந்த சீரியலின் தயாரிப்பாளரும் இவரே. சமீராவுடன் ஒரு பெர்ஷனல் சாட்…

-விளம்பரம்-

pagal-nilavu“உங்க ஆக்டிங் பயணம் தொடங்கியது எப்படி?”

- Advertisement -

“நடிப்பு பற்றி ஆரம்பத்தில் யோசித்ததே இல்லை. ஒருநாள் அப்பாவின் ஆபிஸ் நிகழ்ச்சியில் டான்ஸ் ஆட கூட்டிட்டுப் போனார். அங்கே என் டான்ஸைப் பார்த்துட்டு, ‘அழகா இருக்கே… அழகா ஆடறே… நடிக்கப் போகலாமே’னு கிளப்பிவிட்டாங்க. அப்போ ஏற்பட்ட ஈர்ப்பு, தெலுங்கு சீரியலில் என்ட்ரி கொடுத்தேன்.”

“சமீரா – அன்வர் லவ் பற்றி…”

-விளம்பரம்-

“அன்வரின் அம்மாவோடு நான் ஒரு சீரியல்ல நடிச்சேன். அப்போ, அவங்களுக்கு ஒரு பையன் இருக்காங்கன்னே தெரியாது. ஒருநாள் எதார்த்தமா ஒரு மாலில் நானும், அன்வரும் சந்திச்சோம். என்கிட்டே வந்த அன்வர், ‘நான் உங்களுடைய பெரிய ஃபேன் மேம். உங்க ஆக்டிங் ரொம்ப பிடிக்கும். ஒரு செல்ஃபி எடுத்துக்கலாமா?’னு கேட்டார். ஓகே சொல்லி எடுத்துக்கிட்டேன். அந்த போட்டோவைப் பார்த்த அவர் அம்மா, ‘அன்வர் என் பையன்தான். அவனுக்கு உன் நடிப்பு பிடிக்கும்’னு சொன்னாங்க. அப்புறம் அன்வருடைய பிறந்தநாள் தெரிஞ்சு, ‘என்னுடைய வாழ்த்தை சொல்லிடுங்க’னு அம்மாகிட்டே சொல்ல, ‘நீயே சொல்லிடு’னு அன்வர் நம்பர் கொடுத்தாங்க. காலையில் வாட்ஸ்அப்ல மெசேஜ் பண்ணிருந்தேன். அன்வர் நைட் பார்த்துட்டு ‘இதுவரை நான் பிறந்தநாளே கொண்டாடினதில்லே. ஆனா, இன்னிக்கு மிக முக்கியமான நாள்’னு சொன்னார். அடுத்து ஃபேஸ்புக்ல பேச ஆரம்பிச்சோம். ஒரு கட்டத்தில் அவனோடு இருந்தால், என் லைஃப் நல்லா இருக்கும்னு தோணுச்சு. அவர் அம்மா மாதிரியே நான் இருக்கேன்னு அன்வருக்கும் தோணுச்சாம். அப்புறமென்ன… லவ் பத்திக்கிச்சு.”

pagal-nilavu”தமிழ் சீரியல் வாய்ப்பு எப்படி கிடைச்சது?”

” ‘பகல் நிலவு’ சீரியலில் அன்வருக்கு ஜோடியா நடிக்க ஆள் தேடிட்டு இருந்தாங்க. கடைசியில் ஹீரோயின் பற்றி, அன்வர்கிட்டேயே கேட்டிருக்காங்க. அப்பவும், என்னை ரெஃபர் பண்ணலை. அவருடைய மீடியா புரொடக்க்ஷனில் வேலைப் பார்த்த நடிகைகளையே ரெஃபர் பண்ணினாராம்.. ஆனால், எங்களின் ஜோடி போட்டோவை ஃபேஸ்புக்ல பார்த்துட்டு, ‘உங்க பார்ட்னரையே நடிக்கச் சொல்ல முடியுமா?’னு கேட்டிருக்காங்க. அப்படிதான் ‘பகல் நிலவு’ சீரியலுக்குள்ள நுழைஞ்சேன்.”

” ‘பகல் நிலவு’ சீரியலில் கணவர் – மனைவியா நடிக்கும் அனுபவம் எப்படி இருக்கு?

”அது ரொம்ப ஸ்பெஷலான அனுபவம். அந்த சீரியல்ல ரெண்டு பேரும் வீட்டுக்குத் தெரியாமல் ரிஜிஸ்ட்டர் மேரேஜ் பண்ணிப்போம். அப்புறம் வீட்டில் சொல்லி, தடபுடலா மறுபடியும் கல்யாணம் பண்ணிப்போம். அந்தக் காட்சிக்காக, அன்வர் என் கழுத்தில் தாலி கட்டினபோது, ரொம்ப எமோஷனல்லா ஃபீல் பண்ணேன். அந்த தருணத்தை மறக்கவே முடியாது”

pagal-nilavu”நிஜத்தில் அன்வர் – சமீரா திருமணம் எப்போது?”

”இப்போதைக்கு எங்களுக்கு கல்யாணம் இல்ல. ஆனா அதுக்கான ஏற்பாடுகள் நடக்கும்போது நிச்சயம் உங்களுக்கு சொல்றேன்.”

”’அன்வீரா’னு ஒரு ஃபேஸ்புக் பேஜ் மெயிண்டெயின் பண்றீங்களே…”

”ரெண்டு பேரின் பெயர்களை இணைச்சு உருவாக்கின ஃபேஸ்புக் பேஜ் அது. எங்க ஃபேன்ஸ்காகவே இந்த பேஜ் ஆரம்பிச்சோம். இதுல எக்ஸ்குளூசிவா எங்களின் பெர்சனல் ஃபோட்டோவை அப்லோடு பண்றோம். இது தவிர, எங்க ஃபேன் பேஜ் நிறைய இருக்கு. அவங்க நாங்க போடும் போட்டோஸை குரூப்ல ஷேர் பண்ணுவாங்க.”

pagal-nilavu” ‘றெக்கை கட்டி பறக்குது மனசு’ சீரியல் அனுபவம் பற்றி…”

”அது என் புரொடக்‌ஷனில் பண்ற சீரியல். முதல்முறையா டீச்சரா நடிக்கிறேன். அதுவும் எல்லாருக்கும் பிடிச்ச ‘பிரேமம்’ புகழ் மலர் டீச்சர் பெயரில். இந்த சீரியலுக்கான முதல் சூட்டிங்கை வேலூரில் பண்ணினோம். கடுமையான வெயிலில், கரும்புத் தோட்டத்தில் சூட்டிங். எல்லாம் முடிஞ்சு வீட்டுக்கு வந்தால், ‘நீ யாரு?’னு கேட்பாங்க. அந்த அளவுக்கு, ஆளே உருமாறித் திரும்புவோம். ஆனால், அந்தக் காட்சிகளுக்கு கிடைச்ச வரவேற்பைப் பார்க்கும்போது பட்ட கஷ்டங்கள பறந்துபோச்சு.”

“வெள்ளித்திரைக்கு வரும் ஆர்வம் இருக்கா?”

”நிச்சயம் இருக்கு. ஒரு நல்ல கதாபாத்திரம் அமைஞ்சா நடிப்பேன். இப்போ மட்டுமில்லே. திருமணத்துக்கு அப்புறமும் ஆக்டிங்கை விடமாட்டேன். ஐ லவ் ஆக்டிங்!” என கண் சிமிட்டுகிறார்.

Advertisement