விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னிலை வகுக்கும் 'பாக்கியலட்சுமி' சீரியல் தொடங்கிய நாளிலிருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. சீரியலில் பாக்கியாவை அவர் கணவர் கோபி விவாகரத்து செய்து ராதிகாவை இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார். விவாகரத்திற்கு பின் பாக்கியா கேன்டீன், சமையல், கல்லூரி என்று சுற்றிக் கொண்டிருக்கிறார். பின் ராதிகா கர்ப்பமாக இருந்தார். ஆனால், எதிர்பாராத விதமாக கால் தடுமாறி ராதிகா கீழே விழுந்ததால் கர்ப்பம் கலைந்து விட்டது.

இதனால் கோபமடைந்த ராதிகா, ஈஸ்வரியை பயங்கரமாக திட்டி தீர்த்தார். பின் கோபி, அம்மாவை வீட்டை விட்டு வெளியே போக சொன்னார். இதனால் ஈஸ்வரி மனம் உடைந்து, பாக்கியா வீட்டிற்கு சென்று விட்டார். அந்த நேரத்தில் ராதிகாவின் அம்மா, போலீஸ் ஸ்டேஷனில் ஈஸ்வரி மீது புகார் கொடுத்து விடுகிறார். இதனால் போலீசும் ஈஸ்வரியை கைது செய்தது. இதனால் குடும்பமே அதிர்ச்சியில் இருந்தது. அதற்குப்பின் ராதிகாவின் மகள் மையூ, என்னுடைய அம்மா பூ ஜாடி தடுக்கி தான் கீழே விழுந்தார்.
பாக்கியலட்சுமி சீரியல்:
ஈஸ்வரி பாட்டி தள்ளிவிடவில்லை என்று பாக்யாவிடம் சொல்கிறார். அதற்குப்பின் மயூ சொன்ன சாட்சியை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, ஈஸ்வரியை விடுதலை செய்தது. இதனால், பொய் சொன்னதற்காக கமலா மீது ராதிகா கோவப்பட்டார். பின் கோபி தன்னுடைய அம்மா ஈஸ்வரிடம் மனம் விட்டு அழுது மன்னிப்பு கேட்கிறார். ஆனால் ஈஸ்வரி, கோபியை மன்னிக்கவில்லை. மேலும் எனக்கு இருப்பது ஒரே மகள் பாக்யா தான். நான் இறந்த பிறகு கூட என்னுடைய சாவிற்கு நீ வரக்கூடாது என்று கோபியிடம் சொல்லிவிடுகிறார். இதைப் பார்த்து வீட்டில் உள்ள எல்லோரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.

ஈஸ்வரியின் கோபம்:
பின் கோபி ராதிகா வீட்டிற்கு வந்து மணமுடைந்து அழுது கொண்டிருக்கிறார். நான் தெரியாமல் செய்து விட்டேன் சாரி என்று ராதிகா கோபியிடம் மன்னிப்பு கேட்கிறார். ஆனால் கோபி தன் அம்மாவை நினைத்து புலம்பி அழுது கொண்டிருக்கிறார். தற்போது சீரியலில், கோபி மற்றும் பாக்கியா சமையல் போட்டியில் கலந்து கொள்கிறார்கள். இன்னொரு பக்கம் இனியா தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து வீட்டிற்கு தெரியாமல் பார்ட்டிக்கு செல்கிறார். அங்கு நண்பர்களுக்குள் சண்டை வந்ததால், ஹோட்டல் நிறுவனர் போலீசுக்கு தகவல் சொல்லி விடுகிறார்.
சமையல் போட்டி:
சமையல் போட்டியின் இடையில், இனியாவிற்கு கால் செய்தும் அவர் எடுக்காததால் பாக்கியாவும் பதட்டத்துடன் போட்டியில் இருக்கிறார். அதனால் தனது மகன் செழியனிடம் இது குறித்து சொல்கிறார். செழியனும் இனியாவை தேடிக் கொண்டிருக்கிறார். ஆனால் அதற்குள் போலீஸ் வந்து இனியாவை கைது செய்ய, அங்கிருந்த ராதிகா அவரைக் காப்பாற்றுகிறார். பின் செழியன் இனியாவை அழைத்துச் செல்ல, ராதிகா உன் அம்மா பாக்யா இங்கே வரவேண்டும். அப்போதுதான் நான் இனியாவை அழைத்துச் செல்ல விடுவேன் என்று செழியனிடம் கண்டிஷன் போட பாக்யலட்சுமி சீரியல் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.
View this post on Instagram
கோபியின் பதிவு
இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியலின் இதயமாக இருக்கும் கோபி, ராதிகா இல்லாமல் பாக்கியா குடும்பத்துடன் புகைப்படம் ஒன்று தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதைப் பார்த்த ரசிகர்கள், கோபி பாக்கியா குடும்பத்துடன் இணைந்து விட்டாரா? ராதிகாவின் நிலைமை என்ன?ஒருவேளை சீரியல் முடிவுக்கு வரப் போகிறதா? என்ன நிறைய கேள்விகள் எழுப்பி வருகின்றனர். ஆனால், கோபி என்கிற சதீஷ் சீரியல் முடிவதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறியிருக்கிறார்.






