திருமணமே முடிஞ்சது, முடிவுக்கு வருகிறதா கயல் சீரியல்?- சைத்ரா ரெட்டி சொன்ன விஷயம்

0
302
- Advertisement -

சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியல் தன் குடும்பத்திற்காக போராடும் ஒரு பெண்ணின் கதையை மையமாக கொண்டது. சீரியலில் கடின உழைப்பாளியான ஹீரோயின் கயல், தன்னுடைய மொத்த குடும்பத்தையும் காப்பாற்றி வருகிறார். கடந்த சில மாதங்களாக சீரியலில் எழிலின் திருமண ட்ராக் தான் சென்று கொண்டு இருக்கிறது. எழில் சிறு வயதில் இருந்தே கயலை காதலித்து வருகிறார். ஆரம்பத்தில் கயல், எழிலை நண்பராக தான் பார்த்தார்.

-விளம்பரம்-

பின் எப்படியோ எழில், தன்னுடைய காதலை கயலிடம் சொன்னார். ஆனால், கயல் குடும்ப சூழ்நிலைக்காக எழிலை திருமணம் செய்து கொள்ள மறுத்தார். பின்பு ஒரு கட்டத்தில் கயலுக்கு எழில் மீது காதல் ஏற்படுகின்றது. இருந்தாலும், கயல் அதை சொல்லாமல் அமைதியாக இருந்தார். பின் எழிலுக்கு ஆர்த்தியை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தார்கள். ஆனால், அந்த திருமணத்தில் எழிலுக்கு விருப்பம் இல்லை. கடைசியில் அந்த திருமணம் நின்றது. ஒரு வழியாக எழிலை காதலிப்பதை கயல் ஒத்துக் கொண்டார்.

- Advertisement -

கயல் சீரியல்:

கயல்-எழில் காதலிக்க தொடங்கினார்கள். ஆனால், எழிலின் அம்மாவிற்கு கயலை பிடிக்கவில்லை. இருந்தாலுமே எழில், கயலை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று உறுதியாக இருக்கிறார். பின் கயல்- எழில் திருமண வேலைகளும் சிறப்பாக கோலாகலமாக நடந்தது. அப்போது கயலின் அம்மாவிற்கு விஷம் கொடுத்ததால் திருமணம் தடைபட்டது. அதற்கு பின் கயல் உடைய அம்மா குணமாகி வந்துவிட்டார். இருந்தாலுமே கயல்- எழில் இருவரும் காதலித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

கயல்- எழில் திருமணம் :

தற்போது மீண்டும் கயல்-எழில் திருமண ட்ராக் தான் சென்று கொண்டிருக்கிறது. திருமணத்தை நிறுத்த கௌதம், பெரியப்பா -பெரியம்மா, தீபிகா என அனைவரும் சதி வேலைகளை செய்கிறார்கள். பின் சபையில் தன் பெரியப்பாவை பெருமையாக பேசி, கயல் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டவுடன் பெரியப்பா மனம் மாறினார். இன்னொரு பக்கம் ராஜேஸ்வரி செய்த சதி வேலையால் கத்தி குத்தோடு, தன் தங்கை திருமணத்திற்கு மூர்த்தி வந்து விடுகிறார்.

-விளம்பரம்-

நேற்றைய எபிசோட்:

பின் நேற்றைய எபிசோடில், தீபிகா, ‘நான் கர்ப்பமாக இருக்கிறேன்’ என்று எழில் மீது பழி போடுகிறார். பின் யாரோ ஒருவர், தீபிகா செய்த சதி வேலையை வீடியோ எடுத்து, அனைவரிடமும் காட்டுவார். பின் போலீஸ் வந்து தீபிகாவை கைது செய்கிறது. கடைசியில் பல போராட்டங்களுக்குப் பிறகு எழில்-திருமணம் நடந்து முடிகிறது. எனவே, பெரியப்பா பெரியம்மா திறந்துவிட்டார்கள். மூர்த்தி பொறுப்பாக மாறிவிட்டார். கயலுக்கு சதி செய்த அனைவரும் நல்லவர்களாக மாறிவிட்டனர்.

சீரியல் முடிகிறதா:

அதனால், சீரியல் முடிவுக்கு வருகிறதா என்ன கயலாக நடிக்கும் சைத்ரா ரெட்டியிடம்(இன்ஸ்டாகிராமில் ) கேள்வி எழுப்பினர். ஆனால், அவர் அப்படியெல்லாம் இல்லை. இன்னும் கதையில் நிறைய ட்விஸ்டுகள் இருக்கிறது. இப்போதைக்கு கயல் முடிவுக்கு வராது என்று பதில் அளித்துள்ளார். இந்நிலையில், இன்று வெளியான ப்ரோமோவில், என் பையனுக்கு ‘வேற ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைப்பேன்’ என்று மனசுக்குள் சிவசங்கரி நினைக்கிறார். இன்னொரு பக்கம் மூர்த்தி கத்திக்குத்தோடு துடித்துக் கொண்டிருப்பதை கயல் அறிவாரா என்பதுதான். அது இன்று எபிசோடில் தெரியும்.

Advertisement