இன்று பிக் பாஸ் வீட்டில் முட்டையை தூக்கிச்சென்றவர் யார் தெரியுமா?

0
4360
bigg boss house

ரைசாவின் விதிமீறல்களால் பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவருக்கும் தண்டனை வழங்கும் வகையில் பிக் பாஸ் வீட்டில் உள்ள முட்டையை ஒருவர் தூக்கி கொண்டு வெளியில் செல்வதை நாம் அனைவரும் இன்று வெளியான ப்ரோமோவில் பார்த்தோம். யார் அந்த நபர் தெரியுமா வாருங்கள் அவரை பற்றி பார்ப்போம்?

ப்ரோமோவை பார்க்க கிளிக் செய்யவும்

- Advertisement -

mugamudi

பிக் பாஸ் வீட்டில் ரைசா எப்போதும் உறங்கிக்கொண்டே இருந்து விதியை மீறியதால் அவரை அழைத்து பிக் பாஸ் கண்டித்தார். அதோடு என்றும் இல்லாத வகையில் பிக் பாஸ் அவரோடு ஆங்கிலத்தில் உரையாடினார். இதை எல்லாம் தாண்டி கருப்பு முகமூடி போட்டுகொண்டு திடீரென உள்ளே நுழைந்த ஒருவர். வீட்டில் இருக்கும் முட்டையை தூக்கி செல்கிறார். யார் அந்த நபர் என்று பலரையும் யோசிக்கவைத்துள்ளது.

-விளம்பரம்-

dummy

இயக்குனரும் நடிகை தேவயானியின் கணவருமான ராஜகுமாரன் தான் அந்த முகமூடி போட்ட நபர் என்ற தகவல் சமூக வலயத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த நபரின் புகைப்படத்தையும் தேவயானியின் கணவர் புகைப்படத்தையும் ஒப்பிட்டு ஒரு புகைப்படம் சமூக வலயத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதை பார்க்கையில் அவர் தேவயானியின் கணவர் தானோ என்று தோன்றும் வகையில் உள்ளது.

comaprison

இவர் எதற்காக திடீரென பிக் பாஸ் வீட்டில் இது போல் நுழைந்தார். ஒருவேளை அடுத்த கண்டெஸ்டண்ட் அவர் தானா? போன்ற கேள்விகளும் பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இன்று ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியை முழுமையாக பார்த்தால் இன்னும் பல தகவல்கள் கிடைக்கும் என்று நம்புகிறோம். பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement