2.0 அக்ஷேய் குமார் நடித்த உண்மையான பக்ஷி ராஜனின் முழு வரலாறு வீடியோ இதோ..!

0
207
2.0akshey

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் 2.0 திரைப்படம் நவம்பர் 29ம் தேதி வெளியாகி, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்த படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார். ரஜினியின் நடிப்பிற்கு சற்றும் குறைவில்லாமல் வில்லன் கதாப்பாத்திரத்தில் அசத்தியிருக்கிறார் நடிகர் அக்‌ஷய் குமார்.

இந்த படத்தில் தொழில்நுட்பத்தால் அழிவிற்குள்ளாகும் பறவைகள் பற்றிய அதிக அக்கறை கொண்ட பறவைகள் ஆர்வலராக வலம் வருகிறார் அக்‌ஷய்.உண்மையில் உலகப் புகழ்பெற்ற இந்திய பறவையியல் வல்லுநர் மற்றும் ஆராய்ச்சியாளர் சலீம் மொய்ஜூதீன் அப்துல் அலி அவரை அடிப்படையாகவே வைத்து பக்‌ஷி ராஜா கதாப்பாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

பறவைகளின் வாழ்க்கை பற்றியும் பழக்க வழக்கங்கள் குறித்தும் அவர் ஆராய்ச்சி செய்து கட்டுரைகளையும் நூல்களையும் வெளியிட்டார் சலீம் அலி.
இந்திய, பாகிஸ்தான் நாட்டுப் பறவைகளின் கையேடு (Handbook of the Birds of India and Pakistan) மற்றும் சிட்டுக்குருவியின் வீழ்ச்சி (The Fall of Sparrow) ஆகிய நூல்கள் சலீம் அலியின் நூல்கள் புகழ்பெற்ற படைப்புகள் ஆகும்.