கடந்த 3 சீசன்ல இப்படி ஒரு போட்டியாளர் வரல – இவரு கிட்ட கொஞ்சம் ஜாக்கரதயா தான் இருக்கனும் போலயே.

0
1873
- Advertisement -

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் சற்று முன்னர் கோலாகலமாக துவங்கியது இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். தற்போது வரை ரியோ, ரேகா, அனிதா சம்பத், பாலாஜி முருகதாஸ், ஜித்தன் ரமேஷ்,ஷிவானி நாராயணன்,ரம்யா பாண்டியன், வேல்முருகன் என்று பலர் என்ட்ரி கொடுத்து விட்டனர். இவர்கள் அனைவருமே ரசிகர்களுக்கு பரிட்சயமிமான ஆட்கள் தான்.

-விளம்பரம்-

கடந்த ஆண்டு தர்ஷன், லாஸ்லியா, முகேன் போல இந்த ஆண்டும் ஒரு சில புதுமுகங்கள் பிக்பாஸில் என்ட்ரி கொடுத்துள்ளனர். அதில் பாலாஜி முருகதாஸ் மற்றும் சோமசேகரும் ஒருவர் பாலாஜி முருகதாஸ் பற்றி ஏற்கனவே நமது வலைதளத்தில் வெளியிட்டு இருந்தோம். இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் புதிதாக என்று கொடுத்திருக்கிறார் சோம் சேகர். இவர் இதற்கு முன் பார்த்ததே கிடையாது என்று ரசிகர்கள் மிகுந்த குழப்பத்தில் இருக்கிறார்கள்.

- Advertisement -

ரசிகர்களுக்கு வேண்டுமானால் சோம் சேகர் புதிதான நபராக இருக்கலாம். ஆனால் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஏற்கனவே வந்திருக்கிறாராம். கடந்த 2010ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அழகிய தமிழ் மகன் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார். மேலும், இவர் அதன் பின்னர் சினிமாவில் வாய்ப்புத் தேடி அலைந்திருக்கிறார். மேலும் .பல்வேறு விளம்பர படங்களில் கூட நடித்திருக்கிறாராம். ஆனால், இவருக்கு சின்னத்திரையிலும் சரி, வெளியிலும் சரி சரியான வாய்ப்புகள் அமையவில்லை. இதனால் தனது பாதையை கொஞ்சம் மாற்றிய சோம் சேகர் MMA எனப்படும் மிக்ஸட் மார்ஷியல் ஆர்ட் எனப்படும் குத்து சண்டை பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த விளையாட்டில் இருந்து வருகிறாராம் சோமசேகர். மேலும், இவர் மாநில மற்றும் தேசிய அளவில் MMA போட்டிகளில் தங்கப் பதக்கங்களை கூட வென்று இருக்கிறாராம். ஆனால் இவருக்கு சினிமாவில் எப்படியாவது நுழைந்துவிட வேண்டும் என்பதுதான் ஆசை. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்தபோது இவரிடம் வேல்முருகன் தான் முதலில் பேசினார். அப்போது சோம் சேகர் பத்து வருடத்திற்கு முன்னால் நாம் சந்தித்தோம் என்று கூறியிருந்தார் என்பதும் கவனிக்கப்பட வேண்டியது.

-விளம்பரம்-

Advertisement