பிக் பாஸ் வீட்டுக்குள் அடுத்ததடுத்த புது வரவுகள். நேற்று இரவு திடீரென சுஜா வாருணி உள்ளெ நுழைந்தார். இன்று ஹரிஷ் கல்யாண் வீட்டிற்குள் சென்றுள்ளார்.
யார் இந்த ஹரிஷ் கல்யாண் ?
ஹரிஷ் கல்யாணின் முதல் படம் 2010இல் வெளி வந்த சிந்து சமவெளி, இதில் அவர் அமலா பாலுக்கு ஜோடியாக நடித்திருப்பார். அவருடைய இரண்டாம் படம் அரிது அரிது. அந்த படமும் பெரிதளவில் ஒடடவில்லை. அதன் பிறகு சில படங்களில் முக்கிய வேடங்களில் இணைந்து நடிக்க தொடங்கினார்.
ஆனால் அவர் கயல் ஆனந்தியுடன் இணைந்து நடித்து 2014 ஆம் ஆண்டு வெளிவந்த பொறியாளன் படம் அவரது நடிப்பு திறமையை வெளிக்கொண்டு வந்தது. அதுவே அவருக்கு வில் அம்பு படத்தில் இணை நாயகனாகும் வாய்ப்பை பெற்று தந்தது. அந்த படத்தில் அவரது நடிப்பை பலரும் பார்ட்டி உள்ளனர்.
அடுத்ததாக இயக்குனர் ஹரி அவர்களின் உதவி இயக்குநராக இருந்த கனேஷ் அவர்களின் இயக்கத்தில், மாநகரம் படத்தின் தயாரிப்பாளர் தயாரிப்பில் கன்னி வெடி என்ற படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார்.
இப்போது பிக் பாஸ் வீட்டில் என்ன செய்ய போகிறார் என்று பார்க்கலாம். நிச்சயம் ஆரவ்விற்கு போட்டியாக எவர் இருப்பார் என்று நம்பப்படுகிறது.