விஸ்வாசம் படத்திற்கு இசையமைக்க போவது இவர் தானாம்.. அனிருத் இல்லயாம்

0
1883
Visvasam Ajith

அஜித்-சிவா கூட்டணி தொடர்ந்து 4வது முறையாக இணைந்துள்ள படம் விஸ்வாசம். இந்த படத்தின் தலைப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. படத்தின் சூட்டிங் இந்த மாதம் 19ஆம் தேதி துவங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

viswasamமேலும், படத்தில் அஜித்திற்கு நாயகியாக கீர்த்தி சுரேஷ் இருப்பார் என பலர் தரப்பிலும் கூற்றப்பட்டு வருகிறது. படம் குடும்ப சென்டிமென்ட் படமானதால் கீர்த்தி சுரேஷ் நடிப்பார் எனவும் சொல்லப்படுகிறது. மேலும், படத்தில் பெரிய குழப்பம் எதுவென்றால் மியூசிக் டைரக்டர் தான்.

முதலில், யுவன் சங்கர் ராஜா இசையமைப்பார் என்று கூறினர். அதன் பின்னர் யுவன் சங்கர் ராஜா பல படங்களில் பிசியாக இருப்பதால் அவர் வருவது சாத்தியம் குறையவாக இருந்தது. பின்னர் அனிருத் இசையமைக்கிறார் என படக்குழுவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியது. ஆனால் அதையெல்லாம் தாண்டி தற்போது வந்துள்ள ஹாட் நியூஸ் என்னவென்றால், படத்தின் இசையம்ப்பாளராக விக்ரம் வேதா படத்திற்கு இசையமைத்த சாம் சி.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது தான்.

இதையும் படிக்கலாமே:
விக்ரம் கமல் இருவரும் சேர்ந்து கலக்கப்போகும் புதிய படம் – விவரம் உள்ளே

இந்த செய்தி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட செய்தியாகும். இதனால் மீண்டும் அஜித்திற்கு இந்த படத்தில் செம்ம மாஸ் பேக்ரௌண்ட் மியூசிக் உள்ளது என அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.