தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகை பூமிகா. இவர் முதன் முதலில் ‘யுவகுடு’ என்ற தெங்லுகு படத்தின் மூலம் தான் சினிமா துறையில் அறிமுகமானார். பின் இவர் தமிழில் 2000 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘பத்ரி’ என்ற படத்தில் நடித்திருந்தார். விஜயின் பத்ரி படத்திற்கு பிறகு ரோஜா கூட்டம், ஜில்லுன்னு ஒரு காதல் என்ற இரு பிரபலமான படங்களில் மட்டுமே நடித்திருந்தார். அதற்கு பிறகு இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் இல்லை. அதனால் இவர் டோலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வந்தார். மேலும், நடிகை பூமிகா 2007 ஆம் ஆண்டு தனது நீண்ட நாட்களாக காதலித்து வந்த பாரத் தாகூர் என்ற யோகா ஆசிரியரை திருமணம் செய்தி கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகும் இவர் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு 2016 ஆம் ஆண்டு வெளியான தோனி என்ற படத்தின் மூலம் தமிழ் மொழியில் ரீ என்ட்ரி கொடுத்தார். இந்நிலையில் சில்லுன்னு ஒரு காதல் படப்பிடிப்பின்போது பாட்டி ஒருவர் துப்பாக்கியுடன் பூமிகா, சூர்யாவை துரத்தியதாக பூமிகாவே பேட்டியில் கூறி உள்ளார். கிருஷ்ணா இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த சில்லுனு ஒரு காதல் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதையும் பாருங்க : கடந்த புத்தாண்டு ஒன்றாக சாப்பிட்டோம். தற்போது பிரிந்திருக்கிறோம். விக்ரம் பட நடிகரின் மனைவி உருக்கமான பதிவு.
இந்த படத்தில் சூர்யா, ஜோதிகா, பூமிகா சௌலா உள்ளிட்ட பலர் நடித்து உள்ளார்கள். இந்த படத்தில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடிகை பூமிகா நடித்து இருந்தார். இந்நிலையில் நடிகை பூமிகா சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் ஜில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்த போது நடந்த ஒரு சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியது, ஜில்லுனு ஒரு காதல் படத்தின் பாடல் காட்சி ஒன்றை படமாக்கப்பட்டது.
வீடியோவில் 7 : 20 நிமிடத்தில் பார்க்கவும்
அப்போது ஒரு வீட்டிற்கு முன்பு சவுண்ட் சிஸ்டத்தை வைத்து சத்தமாக பாடலை போட்டுள்ளனர். நானும், சூர்யாவும் அங்கு நின்று கொண்டிருந்த போது அந்த வீட்டின் கதவு திடீரென்று திறந்தது. கதவை திறந்து கொண்டு ஒரு பாட்டி கையில் துப்பாக்கியுடன் வெளியே வந்து எவன்டா அவன் வீட்டிற்கு முன்பு சத்தமாக பாட்டு போடுவது என்று திட்டினார். பாட்டின் கையில் துப்பாக்கியை பார்த்தவுடன் நாங்கள் அனைவரும் கையில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு ஒரே ஓட்டம் தான்.
இதையும் பாருங்க : கொரோனா பீதி : வெளிநாட்டில் இருக்கும் தனது மகனை எண்ணி கவலையில் விஜய்.
ஆனால், அந்த பாட்டி எங்களை விடாமல் துரத்திக் கொண்டே வந்தார். முறையான அனுமதி இல்லாமல் வந்ததால் தான் இந்த பிரச்சினை ஏற்பட்டது. அதனால் தான் அந்த பாட்டிக்கு கோபம் வந்து துப்பாக்கியை காட்டி படக்குழுவுவை ஓட ஓட விரட்டி அடித்தார். இந்த சம்பவத்தை என்னாலும் ஒரு நாளும் மறக்க முடியாது என்று பூமிகா தெரிவித்துள்ளார்.
மேலும், நடிகை பூமிகா திருமணத்திற்கு பிறகு குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தற்போது நடிகை பூமிகா நயன்தாராவின் கொலையுதிர் காலம் படத்தில் நடித்து வருகிறார் அதனைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின், ஆத்மிகா நடித்து வரும் கண்ணை நம்பாதே என்ற படத்தில் பூமிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கின்றார்