சென்னை, காஞ்சிபுரத்தை விடுங்க. ஈரோட்டை தனிமைபடுத்த காரணம் என்ன தெரியுமா?

0
11552
erode
- Advertisement -

தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸின் கோர தாண்டவம் தான் தலைவிரித்து ஆடி வருகிறது. னாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் தான் இந்த கரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது. தற்போது உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் இந்த கரோனா வைரஸ் தொற்று பரவி உள்ளது. இந்த வைரஸ் உருவான சீனாவில் இந்த வைரஸின் பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த இரண்டு தினங்களாக சீனாவில் யாரும் புதிதாக இந்த கொரானா வைரசால் பாதிக்கபடவில்லை என்று சீன அரசு அறிவித்து இருந்ததாகவும் தகவல்கள் வெளியானது.

-விளம்பரம்-
ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் 4 பேருக்கு சிகிச்சை கலெக்டர் கதிரவன் தகவல்

- Advertisement -

இருப்பினும் மற்ற நாடுகளில் இந்த வைரஸின் தாக்கம் மிக மோசமாக மாறி வருகிறது. உலகம் முழுவதும் இந்த கொரோனா வைரஸால் 13. 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதுவரை 13 ஆயிரம் பேர் இந்த கொடிய வைரஸால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இந்த கொரோனா வைரசின் தக்கம் இந்தியாவிலும் பரவி வருகிறது.

இதுவரை இந்தியாவில் 360 கும் மேற்பட்டோர் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கபட்டுள்ளனர், 7 பேர் பேர் இந்த வைரஸினால் உயிரிழந்துள்ளனர். மேலும், தமிழகத்தில் 7 பேருக்கு இதுவரை கோரோனோ பாதிப்பு கண்டு பிடிக்கபட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பை கட்டுபடுத்த நாடு முழுவதும் இன்று சுய ஊரடங்கு உத்தரவு கடைப்பிடக்க்கப்பட்து. இதற்கு மக்களின் ஆதரவும் அதிகம் கிடைத்தது.

-விளம்பரம்-
Image result for கொரோனா ஈரோடு

இந்த நிலையில் தமிழ் நாட்டில் 7 மாவட்டங்களை உட்பட இந்தியாவில் உள்ள 75 மாவட்டங்களுக்கு வரும் 31 ஆம் தேதி வரை இந்த ஊரடங்கு உத்தரவு தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு என்று 3 மாவட்டங்கள் 31 ஆம் தேதி வரை முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் 31 ஆம் தேதி வரை இந்த மூன்று மாவட்டங்களில் அத்யாவசிய பொருட்கள் மட்டும் கிடைக்கும் என்று அறிவிக்கப்ட்டுள்ளது.

இதில் சென்னை காஞ்சிபுரம் மாநிலத்தை விட்டுவிடலாம். ஆனால், சம்மந்தமே இல்லாமல் ஈரோட்டை முடக்க காரணம் என்ன ? அது என்னவெனில், கடந்த மார்ச் 11 ஆம் தேதி தாய்லாந்தை சேர்ந்த 7 பேர் ஈரோட்டிற்கு வந்துள்ளனர். அதில் ஒருவர் கடந்த 16 ஆம் தேதி ஈரோட்டில் கொல்லம்பாளையத்தில் உள்ள இரண்டு மசூதிகளில் தங்கி மதப்பிரச்சாரம் செய்து வந்தனர். அதில் ஒருவர் கொல்லம்பாளையத்தில் இருந்து ஊருக்கு செல்வதற்காக கோவை வந்தடைந்துள்ளார் . மேலும், இவர்கள் 7 பேரும் விமான நிலையத்தில் சென்ற அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அவரை சோதனை செய்த போது அவருடன் இருந்த அந்த 6 பேரின் விவரம் கண்டறியபட்டுள்ளது.

Image result for ஈரோடு கலெக்டர் கதிரவன்

பின்னர் மாவட்ட நிர்வாகம் அந்த 7 பேரையும் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ மனையில் கண்காணிப்பில் உட்படுத்தியது.. பின்னர் அவர்களது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கிண்டியில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி பரிசோதிக்கபட்ட போது அந்த 7 பேரில் இருவருக்கும் கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 7 பேரில் ஏற்கனவே ஒருவர் சிறு நீர் இறந்ததாக கூறப்பட்ட நிலையில் மீதமுள்ள 6 பேரில் இருவருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு ஆட்சியர் தெரிவிக்கையில், தாய்லாந்து நபர்கள் தங்கியிருந்த பகுதிகளில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பொதுமக்கள் அனைவரையும் கண்டறிந்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்இது குறித்து அச்சப்படத் தேவையில்லை. அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பை கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் கொரோனோ பரிசோதனைக்காக இதுவரை 74 பேர் அனுமதிக்கப்பட்டனர். இதில் 20 நாட்கள் தொடர் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 41 பேருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரியவந்தது. 

Advertisement