டாப் 100 பிரபல பட்டியலில் அஜித்தின் பெயர் வராததற்கான உண்மையான காரணம் இது தான்..!

0
133
Ajithkumar

பிரபல பத்திரிகை நிறுவனமான போர்ப்ஸ் நிறுவனம் சமீபத்தில் தனது வளைதள பக்கத்தில் டாப் 100 பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டது அதில் அஜித்தின் பெயர் இல்லாதது பலருக்கும் ஆச்சர்யமாக இருந்தது.

ஆண்டு தோறும் இந்திய அளவில் உள்ள பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், நடிகர்கள், அதிகம் சம்பளம் வாங்கும் பிரபலங்கள் என்று வருடா வருடம் தங்களது இணையதள பக்கத்தில் ஆய்வு நடத்தி பட்டியலை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு இந்திய அளவில் டாப் 100 அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டது. அதில் தமிழ் நடிகர்கள் வரிசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 14வது இடத்தையும் விஜய் 26வது இடத்தையும் பிடித்திருந்தனர்.

ஆனால், இந்த பட்டியலில் அஜித்தின் பெயர் இல்லை என்பது ரசிகர்களுக்கு வருத்தமாக இருந்தது. உண்மை என்னவெனில் இந்த பட்டியல் அக்டோபர் 2017 முதல் செப்டம்பர் 2018 ஆம் ஆண்டு வரை சம்பாதித்த பிரபலங்கள் பெயர் மட்டுமே இடம்பெற்றது. இந்த காலகட்டத்தில் அஜித் எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை என்பதால் தான் அவருடைய பெயர் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.