விஜய்யை ஐயா என்று அழைத்தது ஏன் என்று கமல் கூறிய விளக்கம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகி இருக்கும் விக்ரம் படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தைப் பொருத்தவரை ஒரு பழிவாங்கல் கதை என்றாலும் இயக்குனர் அதை சொல்லிய விதமும், படமாக்கிய விதமும் பாராட்டுகளை குவித்து இருக்கிறது. விக்ரம் படம் வெளிவந்து எல்லா இடங்களிலும் முதல் நாளே நல்ல வசூல் வேட்டை நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது. பிரபலங்கள் பலரும் விக்ரம் படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர்.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகார்ஜுக்கு 80 லட்சம் மதிப்பில் கார் ஒன்றை பரிசளித்தார் கமல். அதுமட்டுமல்லாமல் லோகேஷ் கனகராஜுன் 13 உதவி இயக்குனர்களுக்கு அப்பாச்சி பைக்கும் சூர்யாவிற்கு 40 லட்சம் பாதிப்புள்ள ஒரு rolex கைக்கடிகாராத்தையும் பரிசாக கொடுத்துள்ளார் கமல். விக்ரம் படம் வெளியாவதற்கு முன்பாக கமல் பல்வேறு ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அந்த வகையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது விஜய் குறித்து கேட்கப்பட்டது.

இதையும் பாருங்க : அவன் தாலி கட்டிய நேரம் சரியில்லை, அதனால் இப்படி தான் ஆக போகுது – திருமணத்திற்கு அழைக்கப்படாத பெரியப்பாவின் ஆதங்க பேட்டி.

Advertisement

விஜய்யை ஐயா என்று குறிப்பிட்ட கமல் :

அப்போது அவரிடம் விக்ரம் படத்தின் மூன்றாம் பாகத்தில் தளபதி விஜய் எதிர்பார்க்கலாமா? என்று கேட்டிருந்தார்கள். அதற்கு கமலஹாசன் கூறியிருப்பது, விக்ரம் 3 திரைப்படத்திற்காக ஏற்கனவே ஒருவரை தேர்வு செய்து வைத்து இருக்கிறோம். ஆனால், அதே நேரத்தில் அய்யா ஒப்புக் கொண்டால் அவரை வைத்து படம் தயாரிக்க ராஜ்கமல் பிலிம்ஸ் தயாராக உள்ளது என்று பதிலளித்திருந்தார்.

கேலி செய்த நெட்டிசன்கள் :

இப்படி இவர் அளித்திருந்த பேட்டி சோசியல் மீடியாவில் வைரலானது தொடர்ந்து விக்ரம் 3 திரைப்படத்திற்காக கமல் சூர்யாவைத் தான் தேர்ந்தெடுத்து வைத்து இருப்பதை மறைமுகமாகக் கூறுகிறார் என்றும் ஏற்கனவே ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் நடிக்க இருக்கும் படம் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதே போல ஒரு சிலர் விஜய் ‘ஐயா’ என்று குறிப்பிட்ட கமல் அவரை கேலி செய்து இருப்பது போல இருக்கிறது என்றும் கூறி வருகின்றனர்.

Advertisement

கமல் கொடுத்த விளக்கம் :

இப்படி ஒரு நிலையில் விக்ரம் படத்தின் வெற்றியை முன்னிட்டு பத்திரிகையாளர் சந்திப்பை ஒன்றை வைத்து இருந்தார் கமல். இதில் பத்திரிகையாளர் ஒருவர், விஜய்யுடன் படம் நடிப்பது குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த கமல் ‘இதுகுறித்து நாங்கள் பேசி இருக்கிறோம். அதற்கான நேரம் வரணும், அதற்கான கதை வரணும், அவருக்கும் நேரம் இருக்கனும் எனக்கும் அதற்கான ஏற்பாடுகள் செய்துகொள்ள வேண்டும்’

Advertisement

கமலை ஐயா என்று அழைத்த சிவாஜி :

அவரை நான் ‘ஐயான்னு’ சொல்லிட்டேன் அதற்கு என்ன அர்த்தம் என்றெல்லாம் கேட்கிறார்கள். ஒன்னும் கிடையாது, சிவாஜி சார், கமலஹாசன் ஐயா அவர்களே என்று தான் சொல்வார். அது ஒரு பாசத்தில் சொல்வது தான்’ என்று கூறியுள்ளார் கமல். இது ஒருபுறம் இருக்க சிவாஜி இருந்த போது விழா ஒன்றில் கமலஹாசனை ”ஐயா” என்று சிவாஜி கனேசன் அழைத்த வீடியோ ஒன்றும் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement