தற்போது சோசியல் மீடியா முழுவதும் பேசப்பட்டு இருக்கும் ஒரே விஷயம் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் தான். இவர்கள் பல ஆண்டு காலமாக தமிழ் சினிமாவின் ஹாட் காதல் ஜோடிகளாக வலம் வந்துக் கொண்டிருந்தவர்கள். இடையில் இவர்கள் யாருக்கும் தெரியாமல் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்கள். இது குறித்து நயன்தாராவே நிகழ்ச்சி ஒன்றில் சொல்லி இருந்தார்.இருந்தாலும் இவர்களின் திருமணம் எப்போது? என்பது தான் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து இருந்த ஒரு விஷயம். இப்படி ஒரு நிலையில் இவர்கள் திருமணம் நேற்று சென்னை Ecrல் உள்ள தனியார் சொகுசு விடுதியில் படு கோலாகலமாக நடைபெற்றது.
உறவினர்களை அழைக்காத விக்கி :
இதில் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். மேலும், நயனின் நெருங்கிய உறவினர்கள் கலந்துகொண்ட இந்த திருமணத்தில் விக்னேஷ் சிவனின் அம்மாவை தவிர மற்ற உறவினர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. ஏற்ககனவே விக்னேஷ் சிவன் தனது திருமணம் குறித்து எந்த ஒரு தகவலையும் சொல்லவில்லை என்று விக்னேஷ் சிவனின் பெரியப்பா பேசி இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையும் பாருங்க : கப்பலில் ரொமான்ஸ், ஷிவானியுடன் காட்சி – விக்ரம் படத்தில் தனது Delete செய்யப்பட்ட காட்சிகள் குறித்து மனம் திறந்த மைனா நந்தினி. இதோ வீடியோ.
பெரியப்பா அளித்த பேட்டி :
இப்படி ஒரு நிலையில் பேட்டி விக்னேஷ் சிவன் திருமணம் குறித்து பேசி இருக்கும் அவரின் பெரியப்பா ‘இவர்கள் கூட ஒரு நல்ல பெரியவர்கள் இல்லை என்பது இன்று எனக்கு தெரிந்தது கல்யாண முகூர்த்த நேரம் எட்டிலிருந்து ஒன்பது மாதிரி வரை என்று சொன்னார்கள் ஒன்பதில் இருந்து 10 மணி வரை வேற எந்த சுபநிகழ்ச்சிகளை வேண்டுமானாலும் செய்யலாம் .ஆனால், இவன் தாலி கட்டுயது 10.25 சரியான குளிகை நேரம் இந்த நேரத்தில் எந்த ஒரு நிகழ்ச்சியை நடத்தினாலும் அது மீண்டும் ரிப்பீட் ஆகும்’ என்று கூறியுள்ளார்.
பெரியம்மா அளித்த பேட்டி :
அதை போல விக்னேஷ் சிவன் தங்களை திருமணத்திற்கு அழைக்கவில்லை என்று விக்னேஷ் சிவனை தூக்கி வளர்த்த அவரின் பெரியம்மா தன் ஆதங்கத்தை கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் ‘நான் அவனுடைய பெரியம்மா அவனுக்கு இன்று திருமணம் என்று சொன்னார்கள் எப்படி இருந்தாலும் என்னை அவர் கூப்பிடுவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அவன் வரவே இல்லை என்பது ஏமாற்றமாக இருக்கிறது. கல்யாணத்துக்கு பிறகு இரண்டு பேரும் விருந்திற்கு வந்தால் சந்தோஷப்படுவேன். அதுவும் நடக்குமா இல்லையா என்று தெரியவில்லை.
எங்கிருந்தாலும் நல்லா இருக்கட்டும் :
எங்கிருந்தாலும் நல்லா இருக்கட்டும் என்று நினைக்கிறேன். கல்யாணத்திற்கு இரண்டு பேரும் செல்வோம் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அதுவும் நடக்கவில்லை. அவனை நாங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அவன் நினைக்கிறானா இல்லையா என்பது தெரியவில்லை. அவன் எப்போது வந்தாலும் அவனை வரவேற்க தயாராக இருக்கிறோம்.அவன் எங்க வீட்டில்தான் வளர்ந்தான் விடுமுறை நாட்களில் அவனுடைய அப்பா எங்கே கூட்டிக்கொண்டு வருவார். நாங்கள் எந்த ஊருக்குச் சென்றாலும் அவர் வந்துவிடுவார். நாங்கள் அனைவரும் சுமுகமாக தான் இருந்தோம்.
ஏன் எங்களை அழைக்கவில்லை :
அவன் எங்களை நினைத்து இருக்கா இருக்க மாட்டானா, ஏன் எங்களை அழைக்கவில்லை என்று எங்களால் சொல்ல முடியவில்லை. பெரியவர்கள் தான் பெரியம்மா பெரியப்பா மதிக்க வேண்டும் என்று சொல்லியிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் என்ன சொன்னார்களோ தெரியவில்லை. அவன் வரவே இல்லை. நான்தான் அவனை அழைத்து சென்று குலாதெய்வ கோவிலுக்கு சென்று பொங்கல் வைக்கலாம் என்று சொன்னேன். ஆனால் தனியாகவே வந்து பொங்கல் வைத்து விட்டு சென்றிருக்கிறார்கள்’ என்று உருக்கமுடன் கூறியுள்ளார்.