தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் ஷங்கர். இவரின் அனைத்து படங்களுமே பிரம்மாண்டத்தின் உச்சமாக இருக்கும். அதனால் தான் இவரை பிரம்மாண்ட இயக்குநர் என்று அழைக்கிறார்கள். சமூகத்திற்கு தேவையான நல்ல கருத்து, ஹீரோவுக்கான மாஸ், இதுவரை யாரும் பாத்திராத லொகேஷன்களில் ஷூட்டிங் என அந்த பிரம்மாண்டத்திற்குள் இவை அனைத்தும் அடங்கும். இந்த பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கிய முதல் படம் 1993 ஆம் ஆண்டு வெளியான ‘ஜென்டில் மேன்’ சூப்பர் ஹிட் திரைப்படம் தான்.
இதில் ஹீரோவாக நடிகர் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நடிகை மதுபாலா நடித்திருந்தார். வில்லன் கதாபாத்திரத்தில் ராஜன்.பி.தேவ் நடித்திருந்தார்.மேலும், முக்கிய வேடங்களில் சரண் ராஜ், சுபஸ்ரீ, வினித், மனோரமா, நம்பியார், அஜய் ரத்னம் நடித்திருந்தனர். நடிகர்கள் கவுண்டமணி மற்றும் செந்தில் காமெடியில் கலக்கியிருந்தனர். ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த இந்த படத்துக்கு ஜீவா ஒளிப்பதிவு செய்திருந்தார்,
முதலில் நடிக்க இருந்த சரத்குமார் :
பி.லெனின் – வி.டி.விஜயன் இணைந்து படத்தொகுப்பாளர்களாக பணியாற்றியிருந்தனர்.இப்படத்தினை பிரபல தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் மெகா பட்ஜெட்டில் தயாரித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது. இதில் ஹீரோவாக நடிக்க முதலில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் மற்றும் ‘சுப்ரீம் ஸ்டார்’ சரத்குமார் ஆகிய இருவரையும் ஷங்கர் அணுகினார்.
கமலை அணுகிய ஷங்கர் :
ஆனால், சில தவிர்க்க முடியாத காரணத்தினால் இவர்கள் இருவருமே நடிக்க மறுத்து விட்டனர். அதன் பிறகே ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுனிடம் கதை சொல்லி , அவர் கதாநாயகனாக கமிட்டானார். தற்போது, நடிகர் கமல் ஹாசன் இந்த படத்தில் நடிக்க மறுத்ததற்கான காரணம் தெரிய வந்துள்ளது. கமல் ஹாசன் முன்பு கொடுத்த ஒரு பேட்டி ஒன்றில் ‘ஜென்டில் மேன்’ தொடர்பாக பேசி இருந்தார்.
கமல் விலக காரணம் :
அதில் “இயக்குநர் ஷங்கர் எடுத்த ‘ஜென்டில் மேன்’ படத்தின் இப்போதைய கதை வேறு. ஆரம்பத்தில் அவர் எனக்கு சொல்லும்போது, ஒரு பார்ப்பன பிள்ளையினுடைய militancy பற்றிய கதையை கூறினார். நான் எனக்கு அதில் நடிக்க விருப்பமில்லை என்று கூறினேன். அப்படியே நீங்கள் இப்படத்தை செய்தால் கூட, வேறு ஏதாவது மாற்றம் செய்து கொள்ளுங்கள் கதையில் என்று சொன்னேன்.
உருவாகி வரும் இந்தியன் 2 :
பின்பு, அவர் அப்படிதான் செய்தார் என்பதை நான் புரிந்து கொண்டேன்” என்று கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். ‘ஜென்டில் மேன்’ படத்தில் மிஸ் ஆன கூட்டணி ‘இந்தியன்’ என்ற படத்துக்காக 1996-ஆம் ஆண்டு இணைந்தது. அந்த படம் சூப்பர் ஹிட்டானது. தற்போது, அதன் பார்ட் 2 ஷங்கர் – கமல் காம்போவில் உருவாகி கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தி இருக்கிறது.