நயன்தாரா, பட்டியலில் இடம் பெறாததற்க்கு இதான் காரணம். தெளிவான விளக்கத்தை அளித்த போர்ப்ஸ் நிறுவனம்.

0
31725
nayanthara
- Advertisement -

பிரபல பத்திரிகையான forbes நிறுவனம் ஆண்டு தோறும் இந்திய அளவில் உள்ள பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், நடிகர்கள், அதிகம் சம்பளம் வாங்கும் பிரபலங்கள் என்று வருடா வருடம் தங்களது இணையதள பக்கத்தில் ஆய்வு நடத்தி பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு இந்திய அளவில் டாப் 100 பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் நடிகர்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் என பல்வேறு நபர்கள் டாப் 100 இடத்தை பிடித்துள்ளார்கள். மேலும், சில தென்னிந்திய நடிகர்கள் கூட இந்த லிஸ்டில் இடம் பிடித்தார்கள். இந்த பட்டியலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் 13 வது இடத்தை பிடித்து உள்ளார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is image-29.png

- Advertisement -

இவருக்கு பிறகு ஏ. ஆர். ரகுமான் 16 வது இடத்தை பிடித்து உள்ளார். தமிழ் சினிமா உலகில் ரஜினிகாந்துக்கு பிறகு முடிசூடா மன்னராக விளங்கி வருபவர் விஜய். விஜய் அவர்கள் 47 வது இடத்தையும், தல அஜித் அவர்கள் 52 ஆவது இடத்தையும் பெற்று உள்ளார்கள். இதனை தொடர்ந்து அஜித்தை வைத்து இயக்கிய சிறுத்தை சிவா பட்டியலில் 80வது இடத்தைப் பெற்று உள்ளார். ரஜினியை வைத்து இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் அவர்கள் 84 வது இடத்தைப் பெற்று உள்ளார். ஆனால் கடந்த ஆண்டு இந்த லிஸ்டில் 69 வது இடத்தை பிடித்த நயன்தாரா இந்த வருடம் லிஸ்டில் கூட இடம் பெறவில்லை.

இந்த நிலையில் போர்ப்ஸ் நிறுவனம், நயன்தாரா இந்த ஆண்டு ஏன் பட்டியலில் இடம் பெறவில்லை என்பதற்கான காரணத்தை தெரிவித்துள்ளது. அதில் தென்னிந்திய சினிமாவின் ‘பெண் சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படும் நயன்தாரா, ரசிகர் மன்றங்களின் சொந்த ஆர்மியை கொண்டவர். ஆனால், கடந்த ஆண்டு முதல் பட்டியலில் இருந்து விலகிவிட்டார். அஜித் படத்தை விட நயன்தாரா இருமடங்கு படங்களை செய்திருந்தாலும் அக்டோபர் 2018 மற்றும் செப்டம்பர் 2019 க்கு இடையில், அவர் ஐந்து படங்களில் நடித்துள்ளார் , மேலும் பல படங்களின் ஒப்புதல்களையும் பெற்றுள்ளார்.

-விளம்பரம்-
forbesactress

நயன்தாரா, திரைப்படத் தொழில்களில் உள்ள மற்ற அனைத்து பெண் நடிகர்களைப் போலவே, நயன்தாரா அவரது சக ஆண் நடிகர்கள் சம்பாதிக்கும் தொகையில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கு அல்லது மூன்றில் ஒரு பங்கை சம்பளமாக பெறுகிறார். மேலும், கடந்த ஆண்டு தென்னிந்திய சினிமாவில் இருந்து பட்டியலில் இடம் பிடித்த முதல் மற்றும் ஒரே பெண் நட்சத்திரமாக நயன்தாரான ஒரு முன்னுதாரணத்தை அமைத்திருந்தாலும், தரவரிசை, வருவாய் மற்றும் ‘புகழ் அளவு’ ஆகியவற்றின் கலவையாக கணக்கிடப்பட்டதால், இந்த ஆண்டு அவர் பட்டியலில் இடம் பெற தவறிவிட்டார் என்று போர்ப்ஸ் நிறுவனம் தனது வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.

Advertisement