ஐயா படத்திற்கு பின்னர் நயன்தாரா ஹரி படத்தில் நடிக்காததற்கு ஐயா படத்தில் ஏற்பட்ட இந்த பிரச்சனை தான் காரணமாம். வீடியோவை பாருங்க.

0
1468
- Advertisement -

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா தற்போது தமிழில் லீடு ரோலில் நடிக்கும் நடிகைகளில் நடிகை நயன்தாரா தான் நம்பர் ஒன். நடிகை நயன்தாரா ஏற்கனவே பணியாற்றிய இயக்குனர்களின் படங்களில் பணியாற்ற தயங்குவது கிடையாது. பி வாசு இயக்கத்தில் சந்திரமுகி படத்திற்கு பின்னர் குசேலன் படத்தில் நடித்திருந்தார். அதேபோல விஷ்ணுவர்தன் இயக்கத்தில் பில்லா படத்திற்கு பின்னர் ஆரம்பம் படத்தில் நடித்திருந்தார் முருகதாஸ் இயக்கத்தில் கஜினி படத்திற்கு பின்னர் தர்பார் படத்தில் நடித்திருந்தார். ராஜேஷ் இயக்கத்தில் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்திற்கு பின்னர் மிஸ்டர்.லோக்கல் படத்தில் நடித்திருந்தார். அதேபோல தனது காதலரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரௌடிதான் படத்தில் நடித்த நயன்தாரா தற்போது காத்துவாக்குல இரண்டு காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-
Ayya (2005)

ஆனால் நயன்தாராவை அறிமுகம் செய்த ஹரி இயக்கத்தில் நடிகை நயன்தாரா ஐயா படத்திற்கு பின்னர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. நடிகை நயன்தாரா, ஐயா படத்திற்காக எப்படி வந்தார் என்பது தான் ஸ்வாரஸ்யமான விஷயம். ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படத்தின்போது இயக்குனர் ஹரி ஒரு குடும்ப பாங்கான முகத்தை தேடிக்கொண்டிருந்தார். அப்போதுதான் பிஆர்ஓ ஜான்சனிடம் கதாநாயகி தேர்வு குறித்து கூறி இருக்கிறார். அப்போது ஜான்சன் அவருடைய கேரளாவைச் சேர்ந்த நண்பர் அஜய் என்பவரிடம் கூறியிருக்கிறார். கேரள பத்திரிகை ஒன்றில் நிருபராக வேலை செய்த அஜய் ஒரு பேட்டி ஒன்றில் பங்கேற்ற போது எடுத்த நயன்தாராவின் சில புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

அதன்பின்னர்தான் நயன்தாராவிற்கு ஐயா படத்தில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பொதுவாக மும்பையில் பெங்களூரில் இருந்து வரும் நடிகைகளை தயாரிப்பு நிறுவனங்கள் விமான டிக்கெட்டை போட்டுதான் வரவேற்பார்கள். ஆனால் நடிகை நயன்தாரா தனது அம்மா மற்றும் அப்பா உடன் அரசு பேருந்தில் கேரளாவில் இருந்து கோயம்பேடுக்கு வந்திருக்கிறார். பின்னர் அவரை பிஆர்ஓ ஜான்சன் வரவேற்று அவர்களை வடபழனியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்க வைத்திருக்கிறார் என்று ஏற்கனவே தகவலை வெளியிட்டு இருந்தனர் வலைப்பேச்சு யூடுயூப் சேனல்.

இப்படி ஒரு நிலையில் வலைபேச்சு யூடுயூப் சேனலில் வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் ‘ஐயா’ படத்திற்கு பின்னர் நயன்தாரா ஏன் ஹரி இயக்கத்தில் நடிப்பதில்லை என்று கூறியுள்ளனர். அதாவது , நயன்தாரா ஐயா படத்தில் நடந்து கொண்ட விதம் தான் நயன்தாராவை அதன் பின்னர் ஹரி படத்தில் நடிக்க வைக்காததற்கு காரணம், ஐயா படத்திற்காக சொந்த ஊரில் இருந்து பஸ்ஸில் வந்தவர்தான் நயன்தாரா. அந்த அளவுக்கு எளிமையாக நடந்து கொண்ட அவர் படத்தில் நடித்து விட்ட பின்னர் மற்ற நடிகைகளைப் போல பெரிய நடிகர் என்ற எண்ணம் வந்துவிட்டது. இதனால் ஹரி கொடுத்த உடைகளை கூட அவர் போட மறுத்துள்ளார். அது பெரிய பஞ்சாயத்தாக மாறி இருக்கிறது. ஒரு கட்டத்தில் இந்த படத்தில் இருந்து நான் விலகி விடுகிறேன் என்று நயன்தாரா சொல்லும் அளவிற்கு பஞ்சாயத்து ஏற்பட்டிருக்கிறது. இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டுதான் ஹரி நயன்தாராவை மீண்டும் படத்தில் நடிக்க வைக்கவில்லை. அறிமுக நடிகையாக நடிகையாக இருக்கும் போது இத்தனை அளப்பறைகளை கொடுத்த நயன்தாரா தற்போது 5 கோடி சம்பளம் பெறும் நிலையில் என்னவெல்லாம் செய்வார்கள் என்று யோசித்து விட்டார் என்று கூறி உள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement