தனுஷால் சிம்புவுக்கு ஏற்பட்ட அப்செட்..கைநழுவிய படம்!உண்மையை சொன்ன இயக்குனர்..!

0
275
Simbhudhanush

தமிழ் சினிமாவின் லீட்டில் சூப்பர் ஸ்டார் என்றழைக்கபடும் சிம்பு, சர்ச்சைக்கு மிகவும் பெயர் போனவர்.சிம்பு மீது பல இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் பல்வேறு குற்றச்சாட்டை கூறியுள்ளனர் அதே போல சிம்புவிற்கு போட்டி நடிகர் என்றால் அது தனுஷ் மட்டும் தான். இவர்கள் இருவருக்கும் நடந்த பல்வேறு மறைமுகமான பிரச்சனைகளை பலரும் அறிவார்கள். அந்த வகையில் சிம்பு படத்தை இயக்குவதாக ஜி டி நந்து சிம்பு, தனுஷுக்கு ஏற்பட்ட பிரச்சனை ஒன்றை கூறியுள்ளார்.

இயக்குனர் நந்து:

Director nanthu

நடிகர் சிம்பு நடிப்பதாக இருந்து பின்னர் கைவிடப்பட்ட படங்கள் பல உள்ளது. சிம்பு மற்றும் அசின் நடிப்பில் வெளியாக இருந்த “ஏ சி” மற்றும் சிம்பு நயன்தாரா நடிப்பில் வெளியாக இருந்த “கெட்டவன்” போன்ற படங்கள் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியான நிலையில் பின்னர் கைவிடபட்டது. இதில் “கெட்டவன்” படத்தை இயக்கவிருந்த இயக்குனர் தான் இயக்குனரான நந்து.

கடந்த 2007 ஆம் ஆண்டு “கெட்டவன் ” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட வெளியான நிலையில் இந்த படம் கைவிடப்பட்டது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய இயக்குனர் நந்து இந்த படத்தில் சிம்பு நடிக்க மாட்டேன் என்று கூறியதற்கான காரணத்தை கூறியுள்ளார். அந்த பேட்டியில் பேசிய அவர், முதலில் கெட்டவன் படத்தை சிம்புவை வைத்து எடுக்கலாம் என்று முடிவு செய்தேன்.அப்போது அவர் பிஸியாக இருந்ததால் அவர் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டார்.

Kettavan

சிம்பு மறுத்ததிற்கு பிறகு இந்த படத்தை தனுஷை வைத்து எடுக்கலாம் என்று முடிவிடுதேன். ஆனால்,நான் தனுஷை நேரில் சந்தித்து கதை சொல்லவில்லை இயக்குனர் பூபதி பாண்டியனிடம் தான் தனுஷுக்கு என்னிடம் கதை இருப்பதாகவும் அதை தனுஷிடம் நீங்கள் கூறுங்களென்றும் சொன்னேன். இதற்கிடேயே சில மாதம் கழித்து நடிகர் சிம்பு, நானே இந்த படத்தில் நடிக்கிறேன் என்று என்னிடம் கூறினார்.

நானும் சிம்புவை வைத்து இந்த படத்தை எடுக்க தயாரானேன். ஆனால், அதன் பின்னர் தனுஷிடம் நான் இந்த படத்தின் கதையை சொன்னதாக எண்ணி சிம்பு என்னிடம் கோபித்துக்கொண்டார். அப்போது தான் பிரச்சனை துவங்கியது படத்தில் சிம்பு நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார், அதனால் இந்த படம் எடுக்க முடியாமல் போனது என்று இயக்குனர் நந்து கூறியுள்ளார்.