விஜய் ஓட்டு போட்டாரே, சிம்பு ஏன் ஓட்டு போட வரல – பத்திரிக்கையாளர் கேள்விக்கு அஜித்தை பற்றி சொன்ன டி ராஜேந்திரன்.

0
488
tr
- Advertisement -

கடந்த சில மாதங்களாகவே தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து தான் அதிகம் பேசப்பட்டு இருந்தது . 10 வருடங்களுக்கு பிறகு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று இருப்பதால் அனைத்து கட்சியினரும் உற்சாகத்தில் உள்ளார்கள். மேலும், தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் பயங்கரமாக ஆயுதமாக்கி இருந்தார்கள். இதில் விஜய்யின் மக்கள் இயக்கம் உறுப்பினர்களுக்கும் தேர்தலுக்கு தயாராகி இருந்தார்கள். வழக்கம் போல் இதில் எதிர் கட்சி அதிமுக, ஆளும் கட்சி திமுக, பாஜக, நாம் தமிழர், சுயேட்ச்சை வேட்பாளர் என பல கட்சிகள் போட்டி இட்டது.

-விளம்பரம்-

இப்படி தீவிரமாக அனைத்துக் கட்சிகளும், சுயேட்சை வேட்பாளர்களும் தேர்தலுக்காக பிரச்சாரம் செய்தது முடிந்து மக்கள் அனைவரும் நேற்று ஒட்டு போட்டு இருந்தார்கள். நேற்று நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் மாநிலம் முழுவதும் ஒரே கட்டமாக நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பொதுமக்கள் வரிசையில் ஆர்வமுடன் காத்திருந்து தங்களுடைய ஜனநாயக கடமையை செய்தார்கள்.

- Advertisement -

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்

பொதுமக்கள் மட்டுமின்றி திரை உலக பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என பலரும் வரிசையில் காத்திருந்து தங்களுடைய வாக்குகளை போட்டு இருந்தார்கள். அந்த வகையில் விஜய்யும் தன்னுடைய ஜனநாயக கடமையை செய்து இருக்கிறார். நேற்று காலை நடிகர் விஜய் அவர்கள் சென்னை நீலாங்கரையில் அமைந்து உள்ள வாக்குச்சாவடிக்கு 7மணிக்கு சென்றிருக்கிறார். விஜய் தனியாகவே வாக்குச்சாவடி அமைந்திருக்கும் இடத்திற்கு வந்தார்.

வாக்களித்த TR :

அங்கு வாக்குச்சாவடியில் போலீஸ் பாதுகாப்பு அமைக்கப்பட்டிருக்கிறது. தன்னுடைய கடமையை செய்து விட்டு சென்றார். இந்நிலையில் இயக்குனரும், நடிகருமான டி ராஜேந்தர் சென்னை தி நகரில் உள்ள வாக்குச்சாவடியில் நேற்று வாக்களித்தார். இதனை அடுத்து அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்து இருந்தார். அதில் அவர் கூறியிருப்பது, நாட்டில் இருக்கும் சூழலில் ஓட்டுப் போடலாமா? வேண்டாமா? என்ற ஒரு குழப்பம் ஏற்பட்டது. ஓட்டு போடாமல் வாழலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால், மக்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்று கூறியிருந்தார்.

-விளம்பரம்-

சிம்பு ஏன் வரவில்லை :

இதனையடுத்து அவரிடம் சிம்பு, அஜித் உள்ளிட்ட நடிகர்கள் ஏன் வாக்களிக்க வரவில்லை? என்று கேள்வி எழுப்பி இருந்தார்கள். அதற்கு டி ராஜேந்தர் கூறியிருப்பது, நடிகர் சிம்பு மும்பையில் விளம்பர படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். அவரை வாக்களிக்க வரவழைக்க முயற்சி செய்தும் வர முடியாமல் போனது. இதேபோன்று நடிகர் அஜித் வராததற்கு காரணம் கொரோனா. இத்தனை தேர்தலில் வாக்களிக்க வந்தவர் அஜித். இப்போது வராமல் இருப்பாரா? நாட்டில் சூழ்நிலை சரியில்லை சார். அஜித் நடிப்பில் உருவாகி வெளி வரவேண்டிய வலிமை படம் வெளியாகவில்லை. எல்லாத்துக்கும் கொரோனா தான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.

அஜித் வராததற்கு என்ன காரணம் :

இப்படி டி ராஜேந்தர் அளித்திருக்கும் பதில் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் அஜித்துக்கு கொரோனாவா? இல்லை கொரோனா சூழ்நிலை காரணமாக அவர் வரவில்லையா? என்ன காரணம் அஜித் வாக்களிக்க வராததற்கு? அவர் எப்போதும் இந்த மாதிரி தன்னுடைய ஜனநாயகக் கடமையை செய்யத் தவறியதில்லை என்றெல்லாம் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகிறார்கள். இதற்கு அஜித் தரப்பில் இருந்து என்ன பதில் வரப்போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement