ஜூலியை ஏற்க ஏன் பார்வையாளர்கள் மறுக்கின்றனர் ?

0
2292
julie

பிக் பாஸ் நீள்கழிச்சியில் மிகவும் வெறுக்கத்தக்கவர்கள் பட்டியலில் ஏறத்தாழ முதல் இடம் வகிப்பவர் ஜூலி தான் என்று கூறலாம்.

Julieஅதனால் தான் அவரது வெளியேற்றத்தை சமூக வலைத்தளங்களில் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது. அவரை வெளியேற்றுவதில் பார்வையாளர்கள் மிகவும் கவனம் செலுத்தினார்கள்.

julieஇப்போது திடீரென விஜய் தொலைக்காட்சி ஜூலியை மீண்டும் வீட்டினுள் அனுப்பியுள்ளது. அவர் வீட்டினுள் சென்றது பெரும்பான்மையான பார்வையாளர்கள் மிகவும் வெறுக்கின்றனர்.

julie

ஜூலியை ஏற்க ஏன் பார்வையாளர்கள் மறுக்கின்றனர் ?

  1. முதல் காரணம் அவர் கூறிய பொய்கள்.
  2. புறம் பேசுதல், அவரால் புறம் பேசாமல் இருக்கவே இயலாது என்பது நிரூபணம் ஆனது.
  3. அனைத்தும் தெரிந்தது போல் காட்டிக்கொள்வது (உதாரணம் தமிழ் தாய் வாழ்த்தை எழுதியது தாயுமானவர் என்று கூறியது)
  4. அனைவரிடமும் போலியாக நடிப்பது. அவர் யாரிடமுமே உண்மையாக இல்லை எனது தான் உண்மை (உதாரணம் பரணி வெளியேற்றத்தின் போது நடந்த சம்பவம்)
  5. மற்றவர்கள் ஒன்று செய்கிறார்கள் என்றால் அதையே தானும் செய்து கொள்வது (கட்டி பிடித்துக்கொள்வது, ரைசாவை போல் மேக்கப் செய்து கொள்வது)

மேற்கூறியவை வெறும் சிலவே, இன்னும் சொல்வதற்கு பல உள்ளன. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தலையில் தூக்கி வைத்து கொண்டாடிய பெண்ணை இவ்வாறு அந்த பெண் நடந்துகொள்வதை பார்த்த பின் அவரை வெறுக்கவும் செய்தனர்.

ஜூலி இப்போது உண்மையில் திருந்தி இருந்தாலும் அது மக்களுக்கு போலியாகவே தெரியும்.