இதனால தான் பிரேம்ஜி கல்யாணத்துக்கு யுவன் வரல- தம்பி மீது என்ன வெறுப்பு? பிரபலம் சொன்ன அதிர்ச்சி தகவல்

0
308
- Advertisement -

பிரேம்ஜியின் திருமணத்திற்கு யுவன்சங்கர் ராஜா கலந்து கொள்ளாதது குறித்து பத்திரிகையாளர் கொடுத்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் பிரேம்ஜி அமரன். இவர் சினிமா உலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் மற்றும் வெங்கட் பிரபுவின் தம்பி ஆவார். இவர் நடிப்பு மட்டுமில்லாமல் பாடலாசிரியர், பின்னணி பாடகரும் ஆவார்.

-விளம்பரம்-

இது ஒரு பக்கம் இருக்க, எல்லோரும் பிரேம்ஜிக்கு திருமணம் எப்போது? ஏன் நடக்கவில்லை? என்று பல கேள்விகள் கேட்டு இருந்தார்கள். தற்போது இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இப்போது பிரேம்ஜிக்கு திருமணமாகி உள்ளது. திருமணத்திற்கு முன்பு வெங்கட் பிரபு அறிக்கை விட்டு இருந்தார். அதில் அவர் மணமகள் குறித்து சொல்லி இருந்தார். மேலும், இவர்களுடைய திருமணம் சில தினங்களுக்கு முன் திருத்தணியில் உள்ள முருகன் கோவிலில் நடந்தது.

- Advertisement -

பிரேம்ஜி திருமணம்:

இவர் இந்து என்ற பெண்ணைத்தான் திருமணம் செய்து கொண்டார். இவர் சேலத்தைச் சேர்ந்தவர். இவர் ஒரு வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இது காதல் கல்யாணம் என்றும் தகவல்கள் வெளிவந்தது. இந்து தான் முதலில் பிரேம்ஜி இடம் காதலை சொல்லி இருக்கிறார். அதற்குப் பிறகுதான் இருவருமே வீட்டில் சொல்லி திருமணத்திற்கு சம்மதம் வாங்கி இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. மேலும், இவர்களின் திருமணத்தில் முக்கிய பிரபலங்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டு இருந்தார்கள்.

திருமணம் குறித்த தகவல்:

இந்த திருமணத்தில் நடிகர் ஜெய், வைபவ், மிர்ச்சி சிவா, பாடகர் கிரிஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இப்போது திருமணத்தில் நடந்த நிகழ்ச்சிகளின் வீடியோகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை என பலரும் பிரேம்ஜிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள் . இப்படி இருக்கும் நிலையில் பிரேம்ஜி திருமணத்தில் நெருங்கிய உறவினர்களாக இளையராஜா, யுவன் சங்கர் ராஜா கலந்து கொள்ளவே இல்லை. இது குறித்து பலருமே கேள்வி எழுப்பினார்கள்.

-விளம்பரம்-

செய்யாறு பாலு பேட்டி:

இந்நிலையில் இது தொடர்பாக செய்யாறு பாலு பேட்டியில், ஒரு வழியாக முரட்டு சிங்கிள் பிரேம்ஜிக்கு திருமணம் நடந்துவிட்டது. அவர் பிரேம்ஜி நடிகை, பாடகியை காதலிக்கிறார் என்றெல்லாம் வதந்திகளை கிளப்பி இருந்தார்கள். அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து விட்டார். அவர் சேலத்தை சேர்ந்த சாதாரண பெண்ணை தான் காதலித்து திருமணம் செய்திருக்கிறார். இருவருக்குமே 20 வயது வித்தியாசம். இருந்தாலும் காதல் வந்தால் இதெல்லாம் சாதாரணம் என்பதை நிரூபித்து விட்டார்கள்.

யுவன் வராத காரணம்:

பிரேம்ஜி திருமணத்தில் பிரபலங்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். அந்த வகையில் உறவினரான இளையராஜா, யுவன் சங்கர் ராஜாவும் ராஜாவும் கலந்து கொள்ளவில்லை. யுவன் துபாயில் இருப்பதாக சொல்லப்படுகிறது. என்னதான் வேலையாக இருந்தாலும் தம்பியின் திருமணத்திற்கு வந்திருக்கலாம். தம்பியின் மீது யுவனுக்கு என்ன வெறுப்பு? என்று தெரியவில்லை. இன்னும் சிலர் அவர் மதம் மாறிவிட்டதால் தான் கோவிலில் திருமணம் நடந்ததற்கு வரவில்லை என்றெல்லாம் கூறுகிறார்கள்

Advertisement