தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனாலே இவருக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளார்கள். மேலும், அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகு வலிமை படம் சமீபத்தில் ரிலீசாகி இருந்தது. நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத் அவர்கள் அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கி இருக்கிறார். இதையும் போனிகபூரே தயாரித்து உள்ளார். இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள்.
மேலும், படத்தில் அஜித் அவர்கள் அசிஸ்டன்ட் கமிஷனராக நடித்து உள்ளார். சென்னையில் Satan Slave குழுவை சேர்ந்த இளைஞர்கள் பைக்கை வைத்து பல்வேறு குற்றங்களில் ஈடுபடுகின்றார்கள். இதை அஜித் கண்டுபிடித்து அந்த கூட்டத்தின் தலைவரை பிடிக்கிறார். இந்த குழுவில் அஜித்தின் தம்பியும் இருப்பது தெரிகிறது. இதையெல்லாம் அஜித் எப்படி சமாளித்து வருகிறார்? என்பது படத்தின் மீதி கதை. மேலும், படம் முழுவதும் அஜித்தின் ஒவ்வொரு காட்சிகளும் பிரமிக்க வைக்கும் வகையில் உள்ளது. வலிமை படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.
வலிமை படம் பற்றிய தகவல்:
அதுமட்டும் இல்லாமல் வலிமை படம் வெளியாகி வசூலில் 300 கோடியை நெருங்கி இருப்பதாக தகவல் வந்திருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் வலிமை படத்தை தொடர்ந்து இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் ‘ஏகே 61’ படத்திற்கான வேலையில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள். இந்த படத்தில் படத்தில் ஹீரோயினாக தபு கமிட் செய்திருக்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் இந்த படம் ஐந்து மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டு இருக்கின்றனர். இந்த படத்தின் ஏப்ரல் மார்ச்சில் தொடங்கி இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் படக்குழு திட்டமிட்டிருக்கிறார்கள்.
அஜித் நடிக்க இருக்கும் படங்கள்:
இதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளார் என்றும், ஏகே 62 படத்திற்கான வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படி அஜித் நடிப்பில் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்கள் வெளியாகும். அந்த படமும் ரசிகர்கள் மத்தியில் கோடிகளில் வசூலித்து வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் அஜித் மகள் மற்றும் மகன் குறித்த ஸ்பெஷலான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், அஜித் மகள் மற்றும் மகன் சினிமாவில் நடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த ஷாலினியை அஜித் திருமணம் செய்து கொண்டார். அதன் பின் ஷாலினி சினிமாவில் இருந்து விலகி விட்டார்.
அஜித் மகன், மகள் பற்றிய தகவல்:
ஆரம்பத்தில் அஜித் தன்னுடைய குழந்தைகளை மீடியா பக்கம் கொண்டு வராமல் இருந்தாலும் சமீப காலமாக அஜித் மகள் மற்றும் மகன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் அஜித் மகன் மற்றும் மகள் சினிமாவிற்கு வருவார்களா? என்பது ரசிகர்களின் கேள்வி. அஜித் மகன், மகள் இருவரும் சினிமாவில் நடிப்பதற்கு 100 சதவீதம் வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் அஜித் குடும்பம் எந்த ஒரு சமூக வலைத்தளங்களிலும் இல்லை. அதோடு அஜித் தன்னுடைய குடும்பம் சார்ந்த விஷயங்களை வெளியுலகத்திற்கு காட்டாமலும் உள்ளார். சமீபத்தில் கூட ஒரு பேட்டியில் வெங்கட்பிரபு ஷாலினி மீண்டும் சினிமாவில் நடிப்பாரா? அவரை வைத்து படம் இயக்க வாய்ப்பு இருக்கிறதா? என்று கேட்டபோது வெங்கட்பிரபு கூறியது,
அஜித் குறித்து வெங்கட் பிரபு அளித்த பேட்டி:
அஜித் இதற்கு சம்மதிக்க மாட்டார் என்றும், கண்டிப்பாக ஷாலினி சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க மாட்டார் என்றும் பதிலளித்திருந்தார். அதுமட்டுமின்றி அஜித்துக்கு தற்போது படங்களில் நடிக்க ஆர்வம் இல்லாமல் தான் உள்ளார். ஆனால், தனது ரசிகர்களின் வேண்டுகோளுக்காக தான் அஜித் தற்போது படங்களில் நடித்து வருகிறார். அதுவும் ஒரு காலகட்டத்திற்குப் பிறகு அஜித் நடிப்புக்கு முழுக்கு போட்டு வெளிநாட்டில் செட்டில் ஆக உள்ளதாகவும் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. ஆனால், அஜித் மகன் மற்றும் மகள் சினிமாவில் நடிக்க வர மாட்டார்கள் என்பது உறுதியான தகவல்.