தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் நடிகை ஸ்ருதி ஹாசன். இவர் திரைப்பட நடிகை மட்டும் இல்லாமல் பாடகர், இசையமைப்பாளர் என பன்முகங்கள் கொண்டவர். அதுமட்டும் இல்லாமல் இவர் பிரபல தமிழ் நடிகர் உலகநாயகன் கமலஹாசனின் மகள் ஆவார். நடிகை ஸ்ருதி ஹாசன் அவர்கள் தன்னுடைய ஆறு வயதிலேயே சினிமா துறைக்கு வந்து விட்டார். மேலும்,இவர் தமிழ், தெலுங்கு,இந்தி என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழில் கடைசியாக அஜித் நடிப்பில் வெளிவந்த வேதாளம் என்ற படத்தில் நடித்திருந்தார். அதற்கு பிறகு இவர் தமிழ் சினிமாவில் ஆளே காணோம். இந்நிலையில் நடிகை ஸ்ருதி ஹாசன் அவர்கள் மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உள்ளார். அப்போது தன் தந்தையின் அரசியல் குறித்துப் பேசி உள்ளார். தற்போது இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நடிகர் உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்று தொடங்கி உள்ளார். இதில் கமல்ஹாசன் அவர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த நிலையில் நடிகை ஸ்ருதி ஹாசன் அவர்கள் மதுரையில் உள்ள ஒரு நகைக்கடை திறப்பு விழா நிகழ்ச்சிக்கு சென்று உள்ளார். அப்போது அவர் பேட்டி ஒன்று அளித்து உள்ளார். அதில் அவர் கூறியது, நான் என் தந்தையுடன் அரசியலில் கை கோர்பீர்களா? என்று பல பேர் என்னிடம் கேட்டார்கள். அப்பாவிற்கு என் ஆதரவு எப்போதும் உண்டு. சிறு வயதிலிருந்தே என்னுடைய அப்பா சமூக அக்கறையும், அரசியல் தெளிவும் கொண்டவர்.

இதையும் பாருங்க : சீனா தானா பாடல் மூலம் பிரபலமடைந்த ரகசியாவா இது. இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.

Advertisement

ஆனால், எனக்கு அந்த அளவிற்கு அரசியலில் தெளிவு கிடையாது. அதனால் எனக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணமும் இல்லை. என்னுடைய துறையில் நான் சாதிக்க வேண்டும். அது தான் என்னுடைய கனவு. அது மட்டுமில்லாமல் பல பேர் அரசியலில் ரஜினி, கமல் இருவரும் இணைவார்களா? என்றும் கேட்டார்கள். நான் என் தந்தையைப் பற்றி பேசுவதே சரியானதாக இருக்கும். மற்றவர்களைப் பற்றி எனக்கு தெரியாது. என் தந்தைக்கு சமூகத்தின் மீதான அக்கறைக்கு அவர் அரசியல் சிறந்த நிலைக்கு உயர வேண்டும்.

Advertisement

நிச்சயம் அவர் அரசியலில் விஸ்வரூபம் வெற்றி எடுப்பார் என நான் நம்புகிறேன். அதோடு ரஜினி,கமல் அரசியலில் வெற்றி கிடைக்குமா? என்பதை கணிக்க நான் ஒன்னும் ஜோதிடர் கிடையாது. அது மட்டுமில்லாமல் எனக்கு அரசியலில் அந்தளவிற்கு நுணுக்கம் தெரியாது. என் தந்தை ஒரு நல்ல மனிதன், திறமையானவர், சமூக அக்கறை கொண்டவர். அதனால் அவர் கண்டிப்பாக அரசியலில் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறினார். தற்போது இந்த நியூஸ் சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாக பரவி வருகிறது.

Advertisement
Advertisement