ஆஸ்கர் சர்ச்சைக்கு பின் இந்தியா வந்த வில் ஸ்மித் – வந்ததும் இந்த சாமியாரை போய் சந்தித்திருக்காரே

0
374
- Advertisement -

ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவை பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் சந்தித்து இருக்கும் புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஹாலிவுட்டில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் வில் ஸ்மித். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் புகழ்பெற்ற அமெரிக்க ராப் இசை பாடகரும் ஆவார். இவரை பலரும் உலகில் மிக வன்மையான நடிகர் என்று தான் அழைப்பார்கள்.இவர் பென்சில்வேனியாவில் பிறந்தவர். மேலும், இவர் ராப் பாடகராக தான் மக்கள் மத்தியில் பரிச்சயம் ஆனார். அதற்குப் பிறகு தொலைக்காட்சி தொடரின் மூலம் நடிகரானார்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் ஹாலிவுட்டில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். இவரின் நடிப்பில் வெளிவந்த மென் இன் பிளாக், ஐ, ரோபாட், த பர்சூட் அஃப் ஹாப்பினெஸ், மற்றும் ஹான்காக் போன்ற பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து உள்ளது. அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகி இருந்த படம் கிங் ரிச்சர்டு. இது ஒரு பயோபிக் படம். இது புகழ்பெற்ற டென்னிஸ் பயிற்சியாளர் ரிச்சர்ட் வில்லியம்சனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஆஸ்கர் விருது பெற்ற ஸ்மித்:

இந்த படத்திற்காக சமீபத்தில் இவருக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டிருந்தது. 94 வது ஆஸ்கர் விருது விழா பிரம்மாண்டமாக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் 24 பிரிவுகளுக்கு ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டது. மேலும், இந்த நிகழ்ச்சியில் சிறந்த நடிகருக்கான விருதை வில் ஸ்மித் பெற்று இருக்கிறார். முதன் முறையாக ஆஸ்கர் விருது வாங்கியதால் மிகுந்த உற்சாகத்துடன் வில் ஸ்மித் மேடையில் உரையாற்றும்போது கண்ணீர் சிந்தினார்.

-விளம்பரம்-

ஆஸ்கர் மேடையில் ஸ்மித் கோபத்திற்கு காரணம்:

இந்த விருது கிடைக்க உதவியாக இருந்த படத்தின் தயாரிப்பாளர்களான செரினா மற்றும் வீனஸ் வில்லியம்ஸ் ஆகியோருக்கு மேடையில் நன்றி தெரிவித்தார். பின் ஆஸ்கர் விருது வென்ற நடிகர் வில் ஸ்மித்துக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருந்தது. அதுமட்டும் இல்லாமல் வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பின்கெட் மொட்டை தலை குறித்து ராக் கிண்டலாக பேசியதற்கு கோபமடைந்த வில் ஸ்மித் மேடையிலேயே ராக்கை அடித்து இருந்தார்.

சத்குருவை சந்தித்த ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்:

இது குறித்து சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. இந்நிலையில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவை பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் சந்தித்து உரையாடி இருக்கும் புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் அவர்கள் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவை தன் குடும்பத்தினருடன் சந்தித்திருக்கிறார். மேலும், இது தொடர்பாக சத்குரு அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பது,

சத்குரு பதிவிட்ட டீவ்ட்:

வில் ஸ்மித் உங்களுடன், உங்கள் அற்புதமான குடும்பத்துடனும் நேரம் செலவழித்தது மகிழ்ச்சியாக இருந்தது. உங்கள் தர்மம் உங்கள் வழிகாட்டியாக இருக்கும் என்று கூறி இருக்கிறார். பின் வில் ஸ்மித்தும் சந்திப்பின் போது நடைபெற்ற உரையாடல் வீடியோவையும், புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement