பிரபல இசையமைப்பாளர் தேவா மகளின் மீது கொடுத்திருக்கும் குற்றச்சாட்டு தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவர் தேவா. இவருடைய மகள் ஜெயப்பிரதா. இவருக்கு வடபழனியில் சொந்தமாக வீடு இருக்கிறது. இந்த வீட்டை இவர் தீபிகா மற்றும் ஜெயக்குமார் என்பவருக்கு வாடகை விட்டு இருக்கிறார்.
தேவா மகளால் என் உயிருக்கு ஆபத்து.. அழுது வீடியோ வெளியிட்ட பெண்.. வாடகை பாக்கி பஞ்சாயத்தில் இது வேற ரகம்…#Chennai | #Vadapalani | #Deva | #RentHouse | #Attack | #Police | #PolimerNews pic.twitter.com/4WZ46iRAbe
— Polimer News (@polimernews) October 23, 2024
இப்படி இருக்கும் நிலையில் அந்த வீட்டில் வாடகைக்கு இருந்த தீபிகா கதறி அழுது கொண்டு வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார். தற்போது இணையத்தில் இதுதான் பரபரப்பாக பேசப்பட்டிருக்கிறது. அந்த வீடியோவில் தீபிகா, என்னுடைய வீட்டில் ஏழு பேர் கத்தியுடன் புகுந்து என்னையும், என் கணவரையும் மிரட்டி இருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் அனைத்து பொருட்களையும், வீட்டு கண்ணாடிகள் எல்லாம் அடித்து உடைத்து விட்டார்கள்.
தேவா மகள் மீது குற்றச்சாட்டு:
நாங்கள் உயிருடன் பிழைத்தது பெரிய விஷயம். எனக்கும், என்னுடைய கணவரின் உயிருக்கும் ஏதாவது பிரச்சனை வந்தால் அதற்கு முழுக்க முழுக்க காரணம் ஜெயப்பிரதா தான் என்று கண்ணீர் மல்க பேசி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இது குறித்து அவர் 100க்கும் கால் செய்து கூறியிருந்தார். இதை அடுத்து போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்திருந்தார்கள். ஆனால், எழுத்துப்பூர்வமாக தீபிகா எந்த ஒரு புகாரையும் ஜெயப்பிரதா மீது கொடுக்கவில்லை.
தேவா மகள் கொடுத்த புகார்:
இதை அடுத்து போலீசார் விசாரணை நடத்திய போது, ஜெயப்பிரதாவின் வீட்டிற்கு தீபிகா கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு வாடைக்கு வந்திருக்கிறார். இவர் ஆண்டு ஓராண்டு காலமாக தீபிகா வாடகையை தராமல் இருந்திருக்கிறார். இதனால் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தேவாவின் மகள் ஜெயப்பிரதா வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அப்போது போலீஸ் விசாரணை நடத்தி இருந்தார்கள்.
தீபிகா செய்தது:
அதில் இந்த வீட்டிற்கு வரும்போது மாதம் 25 ஆயிரம் வாடகை என்ற பெயரில் தான் தீபிகா குடியேறிந்தார். அவர் வாடகையை தராமல் இழுத்தடித்து வந்தார். பின் தாங்கள் நடத்தி வரும் ஹார்டுவேர்ஸ் கம்பெனி நஷ்டத்தில் வருவதால் வாடகை தர முடியவில்லை என்று கூறியிருந்தார். பின் சரியாக வாடகையை கொடுப்பதாக தீபிகா சொல்லி இருந்தார்கள்.
போலீஸ் விசாரணை:
அதற்கு பின் தீபிகா மீண்டும் வாடகை தராமல் இழுத்தடித்து வந்து இருக்கிறார். இப்படி இருக்கும் சூழ்நிலையில் திடீரென்று தீபிகா, தன்னையும் தன்னுடைய கணவரையும் அடியாட்களை வைத்து ஜெயப்பிரதா மிரட்டியதாக கூறியிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால், இது தொடர்பாக ஜெயப்பிரதா மீது போலீசில் எந்த ஒரு புகாரும் தீபிகா கொடுக்கவில்லை.