செருப்பால் அடித்தாலும் வாங்கிக்குவேன் -நீயா நானா நிகழ்ச்சியில் பேசிய பெண். வைரலாகும் வீடியோ.

0
2755
neeya-naana
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘நீயா நானா’ நிகழ்ச்சி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர் கோபிநாத். இந்த நிகழ்ச்சியில் காதலுக்காக சுயமரியாதை, தன்மானத்தை இழக்கலாமா? இல்லை வேண்டுமா? என்கிற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை லாக்டவுன் நேரத்தில் விஜய் டிவி மறு ஒளிபரப்பு செய்தது. காதலிப்பவர்கள் தங்களின் சுயமரியாதை, தன்மானத்தை விட்டுக் கொடுக்கலாம் என்று சொல்லுபவர்கள் ஒருபுறம், இதெல்லாம் காதலில் இருக்கவே கூடாது என்று சொல்பவர்கள் இன்னொரு புறம் என்று அமர்ந்திருந்து பேசினார்கள். அப்போது காதலரிடம் எது உங்களை வெகுவாக கவர்ந்தது என்று கேட்கப்பட்டது.

-விளம்பரம்-

அதற்கு ஒரு பெண் எனக்கு ஒண்ணுன்னா முன்னால் வந்து நிற்பார் சார். அவர்களை தட்டி கேட்பார். அந்த கோபம் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று கூறினார். அப்போது உங்களுக்கும் சேர்த்து அடி விழுமே பரவா இல்லையா என்று கோபிநாத் கேட்டார். அதற்கு அந்த பெண் கூறியது, நான் அடி வாங்கி இருக்கேன் சார். இப்போ இந்த இடத்திலே எல்லாரும் பார்க்க அவர் என்னை செருப்பால் அடித்தாலும் நான் வாங்கிப்பேன் சார். எனக்காக அவன் இருக்கிறன் எனும்போது அவனிடம் நான் அடி வாங்குவதில் என்ன தவறு என்று கேட்டார் அந்த பெண்.

- Advertisement -

உடனே சின்னத்திரை சீரியல் நடிகை ரம்யா அவர்கள் கூறியது, ஒரு பெண் காதலனிடம் அடி வாங்கி இருக்கேன் என்று சொல்றாங்க. இது வன்முறை இல்லையா? இது எப்படி சார் லவ் ஆகும் என்று கேட்டார். அதற்கு அந்த பெண் கூறியது, இது என் லவ். இது என் வாழ்க்கை. இவர் தான் என்று ஆகிப்போச்சு. அதுக்குப்பிறகு இது எப்படி சார் குற்றமாகும் என்று கூறினார். மேலும், இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் ஏராளமான மக்களால் பார்க்கப்பட்டுள்ளது.

இதை பார்த்து பலரும் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதில் பல பேர் பெண்ணின் எண்ணங்கள் பிற்போக்குத்தனமானது என்றும், பெண்களை அடித்து கொடுமைப் படுத்தும் விதமாக இந்த செயல் இருப்பதாகவும் கூறி வருகின்றனர். நீங்கள் அவரை ஒருமுறை அடித்துப் பாருங்கள் அப்போது தெரியும் அவர் உங்கள் மேல் வைத்திருக்கும் காதல் என்றும் சிலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement