11-ம் வகுப்பு டியூஷன்.!திவ்யாவுக்கு ஐ.டி.யில் வேலை.! காதல் மலர்ந்து எப்படி..? மலேசிய பெண்ணுடன் காதல்! நவீன் பின்னணி

0
3263
Naveen-Dhivya
- Advertisement -

பிரபல தனியார் தொலைக்காட்சியின் மிமிக்ரி நடிகர் நவீன் குறித்து திவ்யலட்சுமி பகிரங்கக் குற்றம் சாட்டியுள்ளார். மலேசியப் பெண்ணைச் சந்தித்த பிறகு நவீன் என்னை மறந்துவிட்டார் என்று அவர் கூறினார். சென்னையை அடுத்த கொடுங்கையூரைச் சேர்ந்தவர் திவ்ய லட்சுமி. ஐ.டி. துறையில் பணியாற்றுகிறார். இவருக்கும் பிரபல தனியார் தொலைக்காட்சியின் மிமிக்ரி கலைஞர் நவீனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்தநிலையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நவீனுக்கும் மலேசியப் பெண்ணுக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு நடந்துள்ளது. அதை நீலாங்கரை போலீஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

-விளம்பரம்-

dhivya

- Advertisement -

இதுகுறித்து திவ்யலட்சுமி கூறுகையில், “நான் 11-ம் வகுப்பு படித்த போது, டியூஷனுக்காக நவீன் வீட்டுக்குச் சென்றேன். அப்போதுதான் எனக்கு அவர் அறிமுகமானார். எங்களது நட்பு, காதலாக மாறியது. நான், அவரை உயிருக்கு உயிராகக் காதலித்தேன். வழக்கம்போல எங்களின் காதலுக்கு வீட்டில் எதிர்ப்புகள் கிளம்பின. அதை எதிர்த்து நண்பர்கள் முன்னிலையில் அரக்கோணத்தில் கடந்த 2016-ம் ஆண்டு பதிவுத் திருமணம் செய்துகொண்டோம். `அலைபாயுதே’ படம் போல இருவரும் அவரவர் வீட்டில் வசித்துவந்தோம். நவீனுக்காக நான் பல உதவிகளைச் செய்தேன். எங்களின் திருமணம் வீட்டில் தெரிந்துவிட்டது. நவீனின் தங்கைக்குத் திருமணம் முடிந்ததும் என்னை அவரின் வீட்டுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறியிருந்தார்.

அவருக்காக நான் விஸ்காம் படித்தேன். பிரபல தனியார் தொலைக்காட்சியில் வாய்ப்பு வாங்கிக் கொடுக்க உதவி செய்தேன். அதில் மிமிக்ரி கலைஞராக நடித்த நவீனுக்குப் பெயரும் புகழும் கிடைத்தது. பல நிகழ்ச்சிக்காக வெளிநாடுகளுக்குச் சென்றார். அப்போதுதான் மலேசியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண், நவீனைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினார். அவரிடம் நவீன் எனது கணவர் என்று கூறியபோதும் அவர் அதைக் கேட்கவில்லை. சமூக வலைதளத்தில் இருவரும் திருமணம் செய்துகொண்டது போல வீடியோ பதிவு சமீபத்தில் வெளிவந்தது. அதைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்தேன். அதுகுறித்து நவீனிடம் கேள்வி கேட்டேன்.

-விளம்பரம்-

naveen

அந்த வீடியோ குறித்து போலீஸில் புகார் கொடுத்தேன். அது குறும்படம் என்று நவீன் தெரிவித்தார். இதனால் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்தச் சமயத்தில் குடும்ப நல நீதிமன்றத்தில் எங்களின் திருமண தொடர்பான வழக்கு விசாரணை நடந்துவருகிறது. இந்தச் சமயத்தில்தான் மலேசியப் பெண்ணுடன் நவீனுக்கு ஈ.சி.ஆரில் திருமணம் என்று தகவல் எனக்குக் கிடைத்தது. உடனடியாக போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தேன். போலீஸார் துரிதமாகச் செயல்பட்டு திருமணத்தை தடுத்துவிட்டனர். எனக்கு நீதி கிடைக்கும் வரை என்னுடைய போராட்டம் தொடரும்” என்றவரின் குரல் உடைந்தது. அடுத்து அவரால் பேச முடியவில்லை.

சிறிது அமைதிக்குப் பிறகு அவர், தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு தொடர்ந்தார். “அவருக்காகவே வாழ்ந்தேன். ஆனால், மலேசியப் பெண்ணைச் சந்தித்த பிறகு நவீன் மனம் மாறிவிட்டார். அதன்பிறகு என்னை வெறுக்கத் தொடங்கிவிட்டார். என்னைப் பற்றித் தவறான தகவலைப் பரப்பினார். இதனால் மனவேதனையடைந்தேன். சில மாதங்களுக்கு முன்பு என்னுடைய 60,000 ரூபாய் மதிப்புள்ள செல்போன் திருட்டு போனது. உடனடியாக போலீஸில் புகார் கொடுத்தேன். போலீஸார் புகாரை விசாரித்துக்கொண்டிருக்கும்போதே எனக்கு எதிராகப் பல தகவல்கள் வெளியாகியிருந்தன. அது எனக்கு வேதனையை ஏற்படுத்தியது. சமுக வலைதளத்தில் என்னைப் பற்றி அவதூறு கருத்துகளை நவீன் பரப்பியதால் சைபர் கிரைம் போலீஸில் புகார் கொடுத்தேன். போலீஸார் எங்கள் இருவரிடமும் விசாரித்து இனிமேல் யாரும் சமூக வலைதளத்தில் அவதூறு கருத்துகளை பதிவு செய்யக் கூடாது என்று கூறினர். நவீனின் இரண்டாவது திருமணத்தை போலீஸார் தடுத்து நிறுத்தியபோது ` மன்னித்து விடு… எவ்வளவு காசு வேண்டுமென்றாலும் வாங்கிக் கொண்டு திருமணத்தை நடத்த அனுமதி கொடு’ என்று நவீன் தரப்பினர் என்னிடம் கெஞ்சினர். எனக்கு ஏற்பட்ட இந்த நிலைமை வேறு எந்தப் பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது” என்றார்.

KPY-Naveen

naveen divya

இதுகுறித்து நவீனிடம் கேட்டதற்கு, “திவ்யலட்சுமியை எனக்குத் தெரியும். ஆனால், அவரை நான் திருமணம் செய்துகொள்ளவில்லை. என்னை அவர் ஏமாற்றிவிட்டார். எனக்கும் அவருக்கும் திருமணம் நடந்ததாக அவர் பொய் சொல்கிறார். சட்டப்படி அந்தப் பிரச்னையைச் சந்தித்துவருகிறேன். திட்டமிட்டு என்னுடைய திருமணத்தை தடுத்துவிட்டார். நான், திவ்யலட்சுமியின் காலில் விழுந்ததற்கு ஆதாரம் இருக்கிறதா?” என்றார்.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “கமிஷனரின் பரிந்துரையின்பேரில் நவீனின் திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளோம். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. அது முடியும் வரை திருமணத்துக்குத் தடைவிதித்துள்ளோம். அதற்கு நவீனும் சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடந்துவருகிறது” என்றார்.

Advertisement