விஜய், அஜித்.! யார் அரசியலுக்கு வருவார்கள்.! உலக கோப்பை ஜோசியரின் கணிப்பு இது தான்.!

0
36668
Vijay-Ajith
- Advertisement -

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களான விஜய் மற்றும் அஜித் இருவரும் அரசியலுக்கு வருவார்களா மாட்டார்களா என்று மிகப்பெரிய கேள்வி அடிக்கடி ரசிகர்களின் மனதில் எழுந்து வருகிறது. இதில் அஜித், தனக்கும் அரசியலுக்கும் சம்மதமும் இல்லை என்று கூறிவிட்டார். ஆனால், விஜய் அப்படி எந்த ஒரு தெளிவான அறிவிப்பையும் அளிக்கவில்லை. இந்த நிலையில் ரஜினி, கமல், விஜய், அஜித்தின் அரசியல் எதிர்காலம் குறித்து கணித்துக் கூறியுள்ளார் பிரபல ஜோதிடர் பாலாஜி.

-விளம்பரம்-
WATCH: An Astrologer from Tamil Nadu rightly predicted India's fate in ICC Cricket World Cup in January 2019; New Zealand to win the title

2019 ஆம் ஆண்டிற்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறியது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிலையில் உலகக் கோப்பை தொடருக்கான இறுதிப்போட்டி நியூஸிலாந்து அணி வெல்லும் அல்லது இதுவரை உலக கோப்பையை வெல்லாத அணி தான் வெல்லும் என்று ஜோதிடர் பால்ஜி என்பவர் கூறியிருந்தார். அவர் கூறியது போல நியூஸிலாந்து அணி வெல்லவில்லை என்றாலும் வெற்றிக் கனியை மிக நெருக்கத்தில் தவறவிட்டது. சொல்லப்போனால், ஐசிசி விதிகளில் தான் நியூஸிலாந்து தோற்றது என்று பலரும் கூறி வருகின்றனர்.

இதையும் பாருங்க : மேக்கப்பிற்கு முன் எடுத்த செல்பி என்று டிடி பதிவிட்ட புகைப்படம்.! என்ன இப்படி இருக்காங்க.! 

- Advertisement -

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பை முடித்துள்ள பாலாஜி, தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘விஹாரி வருட பலன்கள்’ என்ற நிகழ்ச்சியில் வருங்காலத்தை குறித்த நிகழ்வுகளை கணித்து கூறி வருகிறார். இவர் கூறும் கணிப்புகள் ஒவ்வொன்றும் சரியாகவே நடக்கிறது. சமீபத்தில் நடந்த பொதுத் தேர்தலில் நரேந்திர மோடி தான் பெரும்பான்மையைப் குவித்து வெற்றி பெறுவார் என்று அவர் கணித்திருந்தது அப்படியே பலித்து இருந்தது.

இந்த நிலையில் உலக கோப்பை தொடருக்கு முன்பாக இவர் புதுயுகம் தொலைக்காட்சியில் பங்குபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசுயுள்ள பாலாஜி, இந்த ஆண்டு கண்டிப்பாக நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு செல்லும் என்றும், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தான் அரையிறுதிப் போட்டியில் மோதும் அதிக வாய்ப்பு இருக்கும் என்றும் கூறியிருந்தார். மேலும், நியூசிலாந்து அணி இந்திய அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்றும் அவர் கூறியிருந்தார். அவர் கூறியது போலவே இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்திடம் தோற்றது.

-விளம்பரம்-

அதே போல அந்த வீடியோவில் நியூஸிலாந்து அணியின் கேன் வில்லையாம்சன் தொடர் நாயகன் விருதை பெறுவார் என்றும் கூறியிருந்தார். அவர் கணிப்பை போல வில்லியம்சன் தொடர் நாயகன் விருதையும் வென்றார். இந்த நிலையில் கிரிக்கெட்டை அடுத்து சினிமாவையும் கொஞ்சம் கணித்துக் கூறியுள்ளார் ஜோதிடர் பாலாஜி.

Related image

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பாலாஜி ரஜினி, கமல், விஜய், அஜித்தின் அரசியல் எதிர்காலம் குறித்து கணித்து கூறுகையில், ரஜினி அரசியலில் மக்களின் ஆதரவு இருக்காது என்றும் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல், தவறுகளை சுட்டிக்காட்டும் நபராக இருப்பார் என்று கூறியுள்ளார்.

மேலும், விஜய் மற்றும் அஜித் குறித்து பேசுகையில், நடிகர் விஜய் கண்டிப்பாக அரசியலுக்கு வரமாட்டார் என்றும், அஜித் அரசியலுக்கு வரமாட்டார், ஆனால் அவர் சர்வதேச அளவில் படங்களை கொடுப்பார் என்று பாலாஜி கணித்துக் கூறியுள்ளார்.

Advertisement